காதலர்கள் கவனத்திற்கு பகுதி 7
காதலர்கள் கவனத்திற்கு பகுதி 7
1 எத்தனை புண்ணியம் செய்தனவோ
இந்தப் பூக்கள்
நீ சரமாய்த் தொடுக்கையில்
உன் மடியில் புரள்கின்றனவே…
2 வெயில் கொடுமை தாங்காமல்
இடையில் இளைப்பாறுகிறதோ?!
உன் கைக்குட்டை
3 என் பெயரை
யாரும் அழைத்தால் நீயும்
உன் பெயரை
யாரும் அழைத்தால் நானும்
திரும்பிப் பார்க்கக் கட்டளையிட்டிருக்கிறது
காதல்.....
4 வெட்கப்பட அறிந்திராத வயதில்
நீ பட்டாம் பூச்சியில் ரசிந்திருந்த
நம் விளையாட்டுப் பொழுதில்
கன்னத்தில் முத்தமிட்டேன்.
அழுதவாறே வீட்டிற்கு ஓடினாய்
மறுநாள் காலையில்தான்
தோப்புக்கரணத் தண்டனை கொடுத்துவிட்டு
எனக்குக் கோலம் போடக் கற்றுக்கொடுத்தாய்
இன்றும் கோலங்கள் பார்க்கையில்
கண்களில் கண்ணீர்;…
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
