மாடர்ன் தாலாட்டு கேட்கும் சிறுமி
அம்மா மடி அது
அன்பு மெத்தை
அதில் நீ ஆடிடலாம்
விளையாடிடலாம் -எல்லாம்
முடிந்தபின் தூங்கிடலாம்
கண்ணே,தூங்கிடலாம்
துயில் கொள்வாயா
உன் அம்மாவின் மடியிலே
நீலாம்பரியில் பண் எழுப்பி
உன்னை தூங்கவைக்கவா கண்ணே ,
வா மடியில் கண்ணுறங்கு
கண்மணியே வா கண்ணுறங்கு
ஆரீரோ, ஆரீரோ என்
அழகு தங்கமே ஆராரோ
இப்படி தாலாட்டு பாடியெல்லாம்
அந்த தாயால் தூங்கவைக்க முடியல
இரண்டே வயது சிறுமி அவள்,இப்போ
தூங்காமல், அம்மாவின் கைப்பேசி
காட்டி, அது வேண்டுமென்று அழுகிறாள்
அது கையில் வந்தவுடன் அம்மாவிடம்
செய்கையில் ஏதேதோ காட்டுகிறாள்
அவள் பேசும் மொழியோ அந்த தாய்
மட்டும்தான் அறிவாள்,புரிந்துகொண்டு
'யூடியூபில் "பெப்ப-பிக்" கார்ட்டூன் போட
அக்கணமே சிறுமியின் முகத்தில் சிரிப்பு
ஆறே நிமிடம் ஓடிய அந்த கார்ட்டூன் முடிவில்
தாய் பெப்ப, குழந்தை பேப்பாவை
படுக்கையில் இட்டு,முத்தம் தந்து
'குட் நைட்' சொல்ல , குழந்தை பெப்ப-பிக் தூங்கிட
அதைப் பார்த்துக் கொண்டே
இங்கே, தாய் மடியில் சேய், தன்னை
மறந்து தாலாட்டு ஏதுமில்லாமல்
தூங்கிவிட்டாள்.......ஐயா, இதுதான்
மொபைல்'' உலகம் ஆட்டிவைக்கும்
குழந்தை தாலாட்டு !
இனி பழைய தாலாட்டு பாடல்கள்
எல்லாம் புத்தக சாலையில் வெறும்
"அர்க்கிவ்ஸ்" பாடல்கள்தானோ!