பாடல் 4

ஆண்

ரதிஇவள்..தோன்றினால்...
நிலவொளி...தோற்பதேன்??
வினாக்கள் எனையே சூழ்ந்து
கேட்குதே
என்...அழகியே!
அகிலமும்....அறியுதே
நீயென் காதல் என்று அறிவது??

சாய்ங்காலநேரம் தோன்றும் வானவில்...
அதில் எல்லா வண்ணமும்
நீயே தானம் செய்பவள்
தேய்ந்து தேய்ந்தே பொழிவு
இழந்த என்காதலில்....
நீ வண்ணங்கள் சேர்ப்பாயா???

மௌனத்தால் எனை கொல்லாதே...
ஓ...ஓ...ஓ
தவிப்பில் எனை நீ ஆழ்த்தாதே...
சிதைகின்றேன் கவனி

பெண்ணே!!!
எனது...உற்சாகங்கள்...
உண்ணாது விரதம்
இருக்கக்கண்டேன்
கனியே...கனிவாய்
எனை ஏற்றுக்கொள்
சாறாக உனையே அருந்திக்கொள்வேன்

பெண்:

நான் உனை ஏற்பதா?
நீ எனை ஏற்பதா?
இதைதான் காதல்
புதிர் என்பதா?
உனை பார்த்த நாள் முதல்
சுமக்கின்றேன்(மனதில்) நான்
அறியாமலே எனை
குறை சொல்வதா?
உயிரே...

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (6-Apr-18, 10:38 am)
சேர்த்தது : ஜீசஸ் பிரபா௧ரன்
Tanglish : paadal
பார்வை : 71

மேலே