பஞ்சபூதங்கள்
நிலத்தினுள் வேரூன்றி
மழை நீரில் குளித்து குடித்து
காற்றில் கரியமிலம் உறிஞ்சி
பிராணவாயு வெளித்தள்ளி ,
சூரிய அக்னியில் ஒளிசேர்க்கை உனவாக்கி
ஆகாயவெளி நோக்கி .... வளர்கின்ற மரங்கள்
அறிந்திருக்குமா தெரியவில்லை ..
ஆனால் இந்த மனிதர்களுக்குமா புரியவில்லை ....,
இந்த உயிரும் , உலகும் பஞ்ச பூதங்களின் பின்னல்தான் என்று ......