தனிமையில் ஓர் கடிதம்

காந்த கண்ணிற்கு ஒரு
கடிதம்
தனித்தே இருந்த காலங்களில்
உன்னை நினைத்து அந்த நேரங்களில்
உன்னை காண இன்னும் பல
காலங்கள் ஆகுமோ?

என் நினைத்ததுண்டு
விரல் பிடித்து தலை கோப்பி
கால் பிடித்து மெட்டி அணிந்து
திருமண நாள் எப்போது
என் துயில் நீங்கி தவித்ததுண்டு

என்னவளே உன் நிலை என்னவோ?
உன் கண்களை பார்த்து பின்பே
என் கண்கள் நித்திரை கொள்ளுமடி

என்னவளே நீ புன்னகை புரிந்து
என்னருகில் வரும் போதே
என் மனம் உன் மடி சாய்ந்து
நிம்மதி பெறும்படி

என்னவளே என்னுள் எப்படி
வந்தாயோ? என்னருகே எப்பொழுது
வருவாயோ?

என் தனிமை உன்னை
அழைக்குதடி!
விரைந்து வா! என்னவளே
என் தனிமையை விரட்ட வா!!

எழுதியவர் : உமா மணி படைப்பு (6-Apr-18, 6:04 pm)
பார்வை : 989

மேலே