முதுமையில் தனிமை.

முதுமையில் தனிமை.

கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே!

காதுகள் இரண்டும்
குளிர்ந்தது உண்டு
கண்கள் இரண்டும்
களித்தது கண்டு

கழல்கள் இரண்டும்
ஒத்திசை உற்று
கரங்கள் இரண்டும்
தாளமிட்டது நன்று

குறைபட்டதே தனிமையில்
நெஞ்சம் ஒன்று
நிறைவாய் மகிழ
மற்றொன்று கேட்டு.

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (6-Apr-18, 8:08 pm)
சேர்த்தது : Vivek Anand 354
Tanglish : muthumayil thanimai
பார்வை : 156

மேலே