ஆசையால் அழிந்தான்

பண்டையா காலத்தில் திருநாடு ,மர நாடு என இருநாடுகள் இருந்தன .திருநாட்டை மதில்மேகனும் , மரநாட்டை செழியனும் ஆண்டுவந்தனர் .அதில் திருநாடு ஒரு செழிப்பான நாடு அனைத்து வளங்களும் சிறந்து இருந்தது .மர நாடும் வளங்களில் குறைந்தது இல்லை .மதில்மேகனுக்கு நட்டு வளர்ச்சியை பற்றிய சிந்தனையில் குறியாக இருந்தான் அதே போலவே தான் செழியனும் இருந்தான் ஆனால் அவனுக்கு தினமும் வேட்டைக்கு செல்வதும் மற்றநாட்டு வளங்களை சுரண்டுவதும் ஒரு வாடிக்கையாக இருந்துவந்தான்
.இந்தநிலையில் ஒருநாள் திருநாட்டிற்க்கு அருகில் உள்ள ஒரு வனத்தை வேட்டையாடுவதற்கு சென்றான் அங்குதான் அவனுக்கு ஒரு ரகசியம் கிடைத்தது ஆம் திருநாட்டில் ஆற்றுக்கு அடியில் உள்ள புதையலை பற்றிய ரகசியம் .அதை பற்றி தெரிந்தவுடன் திருநாட்டை அடையவேண்டும் என்ற ஆசை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போனது .ஆனால் திருநாட்டை எதிர்க்கமுடியது என்பது நன்கு புரிந்துவைத்தருந்தான் அதனால் ஒரு சூழ்ச்சியை கையாள திட்டமிட்டுருந்தான் ஆம் இரண்டு நாடுகளும் சேர்ந்து ஏழைமையை ஒழிக்க இணைந்து இருநாட்டு விளைநிலங்களில் விவசாயம் செய்யலாம் என்று சொன்னான் அதனை மதில்மேகமன்னர் முதலில் ஏற்க்க மறுத்தார் பின்பு ஏற்றுக்கொண்டார் .அப்படி விவசாயம் செய்வதற்கு நிலங்களை தங்களுக்கு ஏற்ப பிரித்து கொண்டனர் இதில் ஆற்றை தந்திரமாக செழியன் தான் வசமாக்கிக்கொண்டன் .முதலில் நன்றக தான் இருவரும் விவசாயம் செய்துவந்தனர் சில திங்கள் கழிந்தவுடன் செழியன் தன் திட்டத்தை நிறைவேற்ற தொடங்கினான் .ஆற்று நீரை பாசானவசதிக்கு அளிக்கவில்லை இதனால் அந்த பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டு ஏழைமை தலைதூக்கியது ஆனால் மதில்மேகன் பகுதியில் அதிவேக வளர்ச்சிகண்டது ,ஏழ்மை முற்றிலும் ஒழிந்தது .இந்நிலையில் செழியன் ஆற்று நீரை பாசனத்துக்கு அனுமதிக்கவில்லை அப்படி அனுமதித்தால் விவசாயம் செய்ய சென்றுவிட்டாள் யார் தங்கப்புதையலை தேடுவது என்பதை புரிந்துவைத்திருந்தான்.இந்த நிகழுவ்வு மன்னருக்கு தெரியாமல் இருக்க அமைச்சர்களிடம் தன் புதயலில் ஒருபகுதியை தருவதாக வாக்கு அளித்தான் இதனை நம்பி அமைச்சர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்து நடக்கும் எதையும் கண்டுகொள்ளவில்லை .மக்களும் எப்படியாது மன்னருக்கு தெரிவிக்க முயற்சிசெய்தனர் ஆனால் முடியவில்லை .நாளுக்கு நாள் ஏழமையுடன் கூடிய பசியால் மக்கள் மாண்டனர் .இந்தநிலையில் மக்களை ஒரு புரட்சி வெடித்தது அதனை ஏற்படுத்தியவன் கரிகாலன் என்ற ஒரு தொழிளாளி ,சிலநாட்களில் புரட்சி நாடு முழுவதும் தீப்போல் பரவின .ஆனால் இதுபற்றி தகவல் மன்னருக்கு தெரியவே இல்லை .புரட்சியை கண்டு பயந்த செழியன் அப்பாவி மக்கள் மீது அவர்கள் நாட்டுக்கு சொந்தமான ஆயுதப்படைக்கொண்டே தாக்குதல் நடத்தினான் .வெகுண்டெழுந்த புரட்சியால் செழியன் படை அழிவைநோக்கி சென்றது பிறகு மக்களும் செழியனை அவன் இருக்குமிடத்திற்கு சென்று சிறைபிடித்து அழைத்துவந்து ஆற்றுக்கு அருகில் உள்ள ஒருமரத்தில் கட்டிவைத்து யுதனார் இதனால் அவன் இறந்துவிட்டான் அவன் உடல் அவன் அடைய நினைத்த ஆற்றிலே அடித்துச்செல்லப்பட்டுவிட்டது .பிறகு மக்களே சென்று இந்தத்தகவலை மன்னரிடம் நிலையைக்கூறினர் அதைக்கேட்டதும் ஒருநொடியில் மன்னர் அதிர்ந்துவிட்டார் .பிறகு மீண்டும் அமைச்சரவையை கண்டித்து நாட்டை கண்ணகாணித்தார் மர நாட்டையும் தன் வயப்படுத்திவிட்டான் .இருநாடும் ஒன்றானது வளங்கள் பெருகின .மனை சுரண்ட நினைத்த செழியன் மண்ணுக்கே சென்றுவிட்டான்

எழுதியவர் : மு ராம்குமார் (6-Apr-18, 9:40 pm)
பார்வை : 269

மேலே