விதி

அதிகாலை 6 மணி வழக்கம் போல் அறை கதவை தட்டினால் ரகுவின் அன்னை விமலா, " என்னமா, என்று வெளியே வந்தான். " மணியாச்சுப்பா, வேலை இருக்குனு சொன்னியே, இந்தா இதுல உனக்கும் அகல்யாக்கும் (ரகுவின் மனைவி )டீ இருக்கு" என்றாள். அன்னையிடம் டீ யை வாங்கிவிட்டு அறை கதவை சாத்தினான். அகல்யா எழுந்திரு என்று எழுப்பியவாரே குளிக்க ஆயுத்தமான்னான் ரகு. படுக்கையில் அமர்ந்தவாரே டீ குடித்துவிட்டு பின் சமயலறைக்கு சென்று காலை உணவுக்கு உதவி செய்தாள். அலுவலகத்துக்கு தயாராகி 8 மணிக்கு வெளியே வந்தான் ரகு. உணவு பரிமாறியவளாய், "என்னங்க, இன்னைக்கு என் அத்தை பொண்ணு கல்யாணத்துக்கு போணும்னு சொல்லி லீவு போட சொன்னான் நீங்க ஆபீஸ்க்கு கிளம்பிட்டீங்க", என்றாள் அகல். "இல்லம்மா மாத கடைசி ஆபீஸ்ல ரொம்பவேலை இப்போதைக்கு லீவு எடுக்கறது கஷ்டம்" என்று பேசியவாரே தன் அன்னை காலை கவனித்தான் சற்று வீங்கியும் அவர் நடக்க சிரமபடுவதையும் பார்த்து விட்டு என ஆச்சும்மா என்றான். "அது ஒண்ணுமில்லப்பா குளிக்கிறப்போ பாத்ரூம்ல வழுக்கி விட்ருச்சு லேசா கால் வீங்கிருக்கு மத்தபடி எதுவும் அடி படல என்றாள்.ஏம்மா இதை சொல்லக்கூடாதா, அகல் நீ அம்மா வ கூப்டுட்டுப் பக்கத்துல இருக்க ஹாஸ்பிடல் பொய் என்னனு பாத்துட்டு வா நம்ம நாளைக்கு சாயங்காலம் உங்க அத்தை பொண்ணு வரவேற்ப்புக்கு சேந்து போலாம், இன்னைக்கி எனக்காக அம்மாவ பாத்துக்க என்றான்.உடனே அகல் சரவெடியாய், "எனக்கென்ன உங்களையும் உங்க அம்மா வ பாத்துகிறது மட்டும் தான் வேலையா, எனக்கும் சொந்த பந்தம் இருக்கு கல்யாணம் ஆகிட்டா அவுங்கள மறந்துட்டு உங்களுக்கே சேவகம் பண்னனுமா என்ன, நா கல்யாணத்துக்குப் போறன் என்றாள் .அதற்க்கு மேல் அவளிடம் பேச மனமில்லாமல், "அம்மா நா சாயங்காலம் வந்ததும் நம்ம ஹாஸ்பிடல்க்கு போலாம் அது வர நல்ல ரெஸ்ட் எடுங்க அப்போ தான் கொஞ்சம் வீக்கம் குறையும்" என்றான் ரகு. சூழ்நிலையை அறிந்தவளாய் "சரிப்பா, நீ பாத்து போயிட்டு வா" என்றாள் விமலா. இது ஆண்கள் மட்டுமே சமாளிக்க கூடிய சூழ்நிலை அன்னையின் அன்பயும், மனைவியின் காதலையும் ஒரு சேர சமாளித்து குடும்பத்தை கவனிப்பது. இரவு மணி 8 யை அடைந்தது அகல்யாவிடம் இருந்து ஒரு போன் கூட இல்லை. விமலா பதறிவாரே "தம்பி அகல்யா போன் பண்ணாம இருக்கமாட்டா நீ என்னனு கேளுப்பா" என்றாள். அகல்யாவை அழைக்க தான் கைபேசியை எடுக்கவே அவளே அழைத்தாள்."என்னங்க நான் கல்யாணத்துக்கு கிளம்பிட்டு எங்க அம்மா அப்பா கூப்பிட வீட்டுக்கு வந்தேன் இங்க வந்து பாத்த எங்க அம்மா மாடி படில தவறி விழுந்து கை கால் ல அடி பட்ருச்சு இப்போ தான் ஹாஸ்பிடல் ல இருந்து வரேன்" என்று கூறினாள். விதியின் வலிமையை புரிந்தவனாய், "நீ கூட இருந்து அம்மாவ பாத்துக்க நானும், அம்மாவும் நாளைக்கு வந்து போகிறோம் என்றான்.தன் தவறை உணர்ந்தும், கணவனின் மனதை புரிந்தும் சரிங்க என்று போனை வைத்தால் அகல்யா.

எழுதியவர் : தா..ரா..(தாரணி ராஜாராம்) (7-Apr-18, 9:14 pm)
சேர்த்தது : தாரணி ராஜாராம்
Tanglish : vidhi
பார்வை : 386

மேலே