வானத்தை நிமிர்ந்து பார்த்தான்

வானத்தை நிமிர்ந்து பார்த்தான்
உள்ளங்கையை நெற்றியில் வளைத்து வைத்து
கொளுத்தும் சூரியனைப் பார்த்தான் !
அவன் வான சாத்திரியா ஆதவனை ஆராய்ச்சி செய்ய ?
நின்ற வறண்ட வயல் நிலத்தைப் பார்த்தான்
கண்களில் கண்ணீர் சொட்டியது !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Apr-18, 8:39 am)
பார்வை : 711

மேலே