ஜிகர்தண்டா

ஐஸ் கிரீம் கேட்டு
அழும் சிறு பிள்ளையாய்
அவள் கண்கள் இரண்டும்
உன்னைத் தேடி இங்கே
அடம் பிடித்து
காத்துக் கிடக்கின்றன
இந்தப் பரிதாபத்தை என்னால்
சகிக்க முடிய வில்லை
ஒரு முறை இங்கு வந்து
ஆறுதல் கூறி விட்டுப் போ..
கோடை கால கொடும் வெயிலில்
அலைந்து திரிபவன்
ஆசையோடு மதுரை
ஜிகர்தண்டாவை பருகிக்
கவலை மறக்கும்
ஆனந்தத்தை அவையும்
அனுபவித்து மகிழட்டுமே

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (10-Apr-18, 4:16 pm)
பார்வை : 182

மேலே