நீயும் பேசும் தலையணையும்

கைவிரல் கோர்த்து
கண்வழி நோக்கி
என்னதென்று கேட்கிறாய்
கொண்ட காதல் குறித்து.
இன்னதென்று காட்டிட
உணர்வுகட்கு ஏதடி
காட்சி ஊடகங்கள்?
என்றேனும் உனக்கும்
உள்ளுள் தென்படும்...
பெயரறியா படத்தின்
இறுதிக்கட்டத்தில்...
பகலில் ஏனோ எரியும்
மெழுகுவர்த்தி காண...
தவறி விழும் எனது
பழைய கண்ணாடியை
நீ தாவிப்பற்றுகையில்...
ஈரம் காயாத தரையில்
என் கால்தடம் மீது
பிறர் காலணிகள்
காண நேர்கையில்...
என் எச்சில் படர்ந்த
தெர்மோமீட்டரை
அலம்பி துடைக்கவும்
நீர் வழியும் விழிகளில்...
நானற்ற இரவொன்றில்
எனது தலையணையில்...

எழுதியவர் : ஸ்பரிசன் (10-Apr-18, 7:18 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 105

சிறந்த கவிதைகள்

மேலே