குழந்தை
மழலையெனும்
கோடிச்செல்வம் ஓடி வருது
என் இதயத்தில்
உவகை கூடி வருது
தத்தி தத்தி
தவழ்ந்து வந்து
என் மடியில் சாயிது
என் துயரமெல்லாம்
அடுத்த நொடியிலே போகுது
பரிதி ஒளியில் நிலவு வருது
பாற்கடலின் அமுதம் வருது
வானவில் இன்று என் வாசல் வருது
என் பரம்பரையை
தழைக்கசெய்ய புதுச்சாரல் வருது
நாங்கள் எழுதி முடித்த
காதல் கவிதை வருது
எங்கள் வாழ்க்கைக்கு
அர்த்தம் கூட்ட விடியல் வருது
என் தவங்களுக்கு வரங்கள்
கொடுக்க என் குலதெய்வம்
குழந்தைவடிவில் ஆடி வருது...