இன்றைய சில பெண்மணிகள்
சில பெண்களுக்கு
தாங்கள் முன்னேற்றப் பாதையின்
உச்சத்தில் இருப்பதாய் எண்ணம்
திருமணத்தில் கட்டிய புனித
தாலியை எள்ளி நகையாடுகின்றார்
மூன்று முடிச்சை 'நாளைய சிக்கலின்'
முடிச்சோ என்று நினைக்கின்றார்
கட்டிய இரண்டாம் நாளே 'தாலியை'
கழற்றியும் பெட்டியில் தங்கம்
என்பதால் பூட்டி வைக்கின்றார்
நெற்றியில் எரிய 'குங்குமப்பொட்டுக்கும்'
இவர்கள் மதிப்பு தருவதில்லை அதையும்
இவ்ரகள் வைப்பதில்லை ஏன் என்று கேட்டால்
ஏதேதோ பேசுவார் எல்லாம் தெரிந்தவர்போல்
இப்படியே பேசி, நடந்து, கட்டிய புருஷனையும்
இரண்டே நாளில் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு
'விவாக ரத்து'கோரி நீதிமன்றம் நாடுவார்
திருமணம் என்ன 'கிள்ளுக்கீரையோ' இவர்களுக்கு
என்று திருத்துவார் இவர்கள், யார்
திருத்துவார் இவரை அவர்கள் பெற்றோரும்
அறியாது தலை பிய்த்துக்கொள்கிறார் பாவம்
நமது பாரம்பரியம், கலாச்சாரம் பண்பாடு
பாவம் இவர்களை அண்டவும் வரவில்லையோ
நல்லதை எப்போதும் ஏற்றுக்கொள்ளலாம்
அதுபோல் நமக்கு ஒவ்வாத எண்ணங்கள்
நம்மை வாழவைக்க வந்தவை அல்ல மாறாக
நம்மை வீழ்த்தவந்தவை என்று இவர்கள்
அறிந்தால் திருந்தி வாழ வழியுண்டு.