தமிழர்
அன்பினாலும், பண்பினாலும்
உயர் எண்ணங்களினாலும்
விட்டுத்தரும் கொள்கையினாலும்
உயர்ந்தவர் இந்நாட்டவர் என்று
இந்தியர் நம்மைக், கூறுகையில்,
தமிழர் இங்கு தனித்த நர்குணங்களோடு
தனித்து காண்பவர் என்பதை யார் மறுப்பார்
தென்குமரி கண்டத்தில் திராவிடம் தழைத்தது,
வேறெங்கும் உலகில் நாகரீகம் வருவதற்கு முன்னே
மொழிகளிலே தொன்மொழி எங்கள் தமிழ் மொழி
உலகிற்கே வேதம்போல் வந்தமைந்தது வள்ளுவன் திருக்குறள்
'உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று
உழவும், தொழிலுமே இந்நாட்டிற்கே முதுகெலம்பு
என்று கூறியவனும் தமிழ்ப்புலவன் என்றால்,
'போன நூற்றாண்டில்' 'உழவு பசுமைப்புரட்சி' நாட்டிற்கே
முதல் முதலாய் கொணர்ந்தவனும் ஓர் தமிழனே *
இன்றும் விவசாயமே நம் நாட்டின் முதுகெலம்பு ,தொழிலும் ;
தொழிற்சாலைகள் முதல் முதலாய் வந்ததும் இங்கே
வீரத்திலும் முதல்வன் தமிழன் , எங்கள் தமிழ்மன்னர்கள்
வீரத்தால் நாட்டிற்கப்பாலும் ஆட்சி நடாத்தினர்
தேவைப்பட்டால் வீறுகொண்டு எழுபவன் தமிழன்
அன்பினால் வாழத்தெரிந்தவன் தமிழன்
அடிமையாய் வாழத்தெரியாதவன் என்றும் பறவைபோல
சுதந்திரமாய் வாழத்தெரிந்தவனும் தமிழன்
தமிழர் நாங்கள், தனிப்பண்புகள் பலவற்றால்
நாடென்று வரும்போது நாங்கள் முதலில் இந்தியர்கள்
என்றவாரே உணர்ச்சிபொங்க நாட்டிற்கு பல போரில்
தம்மையே அர்ப்பணித்த வீர மறவர்கள் தமிழர்
என்றும் எப்போதும் தமிழனென்று சொல்லி
தலைநிமிர்ந்து நிற்போம் , நாம் தமிழர்
இந்திய தவப்புதல்வர் .
(* பேராசிரியர்.ஸ்வாமிநாதன்)