இன்னிசை
இசையே நீ
செவிகள் சுவைத்து
இதயம் நிரம்பும்
அற்புத ஒலிரசம்...
வெறும் காற்றாக
துளைக்குள் நுழைந்து
இசைக்கீற்றாக வெளிவரும்
வல்லமை உண்டு உன்னிடத்தில்...
இசையே உன்
தோற்றங்களும்
மாற்றங்களும்
வியக்கவைக்கிறது...
குழந்தையிடம் தாயாகவும்
தாயிடம் குழந்தையாகவும்
கடவுளிடம் பக்தனாகவும்
காதலரிடம் தூதுவாகவும்
எத்தனை பரிமாணங்கள் உன்னிடத்தில்...
இசையே நீ
எங்கு கற்றாய்
இந்த வித்தையை
அழும் குழந்தையை
சிரிக்க வைக்கிறாய்
தொழும் தெய்வத்தையும்
மகிழ வைக்கிறாய்...
தொட்டில் முதல்
சுடுகாடு வரை
மானுட வாழ்க்கையில்
பின்னிப்பிணைந்து
கூடவே பயணிக்கிறாய்...