மதுவினால் வரும் கேடு திடுக்கிடும் தகவல்

மதுவினால் வரும் கேடுகள் பற்றி ஆயிரமாயிரம் ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வருகிறது. திருக்குறள் சொல்லாத உண்மையா?

இருந்தாலும் கூட தமிழக அரசு உள்ளிட்ட பல அரசுகள் அதைத் தடை செய்யவில்லை.



இப்போது பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் Medical Research Council of Molecular Biology பிரிவு நடத்திய ஆய்வு பல திடுக்கிடும் தகவல்களைத் தருகிறது.



மது அருந்துவது டி என் ஏ -ஐ சேதப்படுத்துகிறதாம்! முதன் முறையாக இந்த உண்மை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஆகவே விஞ்ஞானிகள் மது அருந்துவோரை அவர்கள் குடிக்கும் அளவை உடனடியாகக் குறைக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.

முற்றிலுமாக நிறுத்தினால் பிழைத்தார்கள்!



பிரிட்டனில் வருடா வருடம் 12000 பேர்கள் கான்ஸர் நோயினால் பாதிக்கப்படுகின்றனர் – மது அருந்துவதால்!



பிரிட்டனின் ஆய்வு, மது அருந்துவதால் அது உடலில் Acetaldehyde

என்ற கெமிக்கலை உருவாக்கி DNA -ஐ சேதப்படுத்துவதை உறுதி செய்கிறது.



No Liquor Shops near Schools, please!



உடலில் ரத்தத்தில் உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை செல்கள் ஆக்ஸிஜனை ஏந்திச் சென்று தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது. இந்த ரத்த ஸ்டெம் செல்களுக்கு மது சேதம் ஏற்படுத்துகிறது.



புதிதாக உருவாகிய கெமிக்கல் டி என் ஏ -ஐ மாற்றி மரபணு கோடை (Genetic Code) மாற்றி விடுகிறதாம்.



இந்தத் தகவல் நேச்சர் (Nature) பத்திரிகையில் “மிக முக்கியம்” என்று குறிப்பிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆகவே மதுவைத் தவிருங்கள் என்று அறிவுறுத்துகிறது கட்டுரை! கேன்ஸர் ஆராய்ச்சியில் தலை சிறந்து விளங்கும் நிபுணரான Prof Linda Bauld , “இந்த அரிய ஆராய்ச்சி, செல்கள் சேதமாகும் விஷயத்தை விளக்குகிறது” என்கிறார். மது ஏழு விதமான கேன்ஸருடன் தொடர்பு கொண்டுள்ளது.



Liver

Breast

Bowel

Upper Throat

Mouth

Oesophagal

Larynx



ஆகிய இடங்களில் ஏற்படும் கேன்ஸருக்கும் மதுவிற்கும் தொடர்பு உண்டு.



எப்படி மது உடலைப் பாதிக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் நீர்த்த மதுவை எலிகளுக்குக் கொடுத்தனர்.

பிறகு அவற்றின் டி என் ஏ-ஐ சோதனை செய்தனர்.

ஜெனிடிக் ப்ரேக் ஏற்பட்டு, குரோமோசோம்கள் மாற்றப்பட்டு டி என் ஏ ப்ளூபிரிண்ட் மாறப்படுவதை அவர்கள் கண்டனர்.

புரபஸர் Ketan Patel கேன்ஸர் ஆராய்ச்சியில் நிபுணர். அவர் கூறுகிறார்:- “ ஸ்டெம் செல்களில் டி என்ஏ -யின் சேதத்தினால் சில கேன்ஸர்கள் உருவாகின்றன!”



இப்படி நாளுக்கு நாள் மதுவின் தீமை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.



illicit liquor bulldozed in Patna,Bihar.

பரிதாபத்திற்குரியவர்கள் தமிழ் நாட்டின் ஏழை எளிய மக்கள்.

“குடிக்கப் பழக்கினார்கள்”.



அவர்கள் புத்தியை மழுங்க அடித்தார்கள்.

அவர்களுக்கு கேன்ஸர் உள்ளிட்ட பல வியாதிகளை உண்டாக்கினார்கள்.



பல லட்சம் குடும்பங்கள் பாழாயின; பாழாகிக் கொண்டிருக்கின்றன!



இறைவன் தான் தமிழ்நாட்டின் எளிய “குடி மக்களைக்” காக்க வேண்டும்.



அனைவரும் வேண்டுவோமாக!

***

ச.நாகராஜன்

எழுதியவர் : (12-Apr-18, 7:30 pm)
பார்வை : 69

சிறந்த கட்டுரைகள்

மேலே