அவ்வாறு செய்யவில்லை

முத்தம் தரும் எண்ணத்தில் உன் புகைப்படத்தை கையில் எடுத்தேன்...முத்தமிடவில்லை...துணிந்திருந்தால் உன் புகைப்படத்திற்க்கு அல்ல உன் கன்னத்திலே.. காதல் பேசும் செவ்விதழிலே.. ஆழப் பதித்திருப்பேன் என் இதழ் முத்தத்தை....ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை ...ஏன் தெரியுமா?.என் முத்தம் தீ போல் ...ஆக்சிஜன் கிடைத்தால் பரவும் தீ போல் உன் மூச்சுக் காற்று பட்டவுடன் பரவிவிடும்..அதன் சூடு நீ தாங்க மாட்டாயோ என்றுதான்...

எழுதியவர் : Elangathir yogi (13-Apr-18, 12:21 am)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
Tanglish : avvaru seiyavillai
பார்வை : 93

மேலே