பிறந்த நாள் வாழ்த்துப்பா

நின் மதி முகம் காண்கையில்
எம் நிகழ் உலகம்தன்னை மறக்கின்றேன்
உடல் சுகமில்லை எனும்போதும்
நின் உயிர் வார்த்தையில் பலம் வார்க்கிறேன்
குறுந்தொகை பாக்கள் ஆயிரம்
கொட்டி முழங்கிட என்ன லாபம்
நின் கொலுசொலிகளில் எம் இதயம்
துடிப்பதை கேட்கிறேன்.
இன்று பிறந்த பயன் நீர் செய்தாய்
நின்னை பெற்ற பயன் நான் கொண்டேன்.
பிறந்த நன்நாள் வாழ்த்துகள்...