சிரிக்கும் சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துகள்

விளம்பி என்னும் பெயர்கொண்டு
=விடிந்து விட்ட புத்தாண்டே
விளம்ப முடியா வேதனையால்
=விம்மும் மாந்தர் வாழ்வினிலே
விளம்பம் இன்றி விளக்கேற்றி
=வெளிச்சம் சூழ விட்டேநீ
தளம்பி வழியும் நிறைகுடமாய்
=தாக மெல்லாம் தீர்ப்பாயே!
*****************************************
தோழமைகளுக்கு.. சிரிக்கும் சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்.!!!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-Apr-18, 10:02 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 268

மேலே