ஒரு புள்ளியில் தொடங்கிய பயணம்

ஆதிமூலமெனும்" ஒரு
புள்ளியில் தொடங்கியப்
பயணம்" மேற்கொள்ளும்
ஆன்மாவின் முடிவும்
அவ்வாதி மூலனிடமே
சென்று சாந்தி பெறும்
மலர்களெனும் "ஒரு
புள்ளியில் தொடங்கியப்
பயணம்" மேற்கொள்ளும்
தென்றல் கூட மண மணக்கிறது பூவோடு ஒருமணமாகிட பூ
வர சனாக மலர்மகுடம்
சூடிக்கோண்டு ஜீவனை
ஜீவிக்க வைக்கிறதே
சமுத்திரமெனும் "ஒரு
புள்ளியில் தொடங்கியப்
பயணம்" மேற்கொண்டு
நீராவியாகி மழையாகி
பனியாகி உருகி நதியாகி
அச் சமுத்திரத்திடமே
சென்று சாந்தி பெறும்
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
ஒரு புள்ளியில் தொடங்கிய பயணம்:
கவிதைமணயில் / மும்பை