என்ன தவம் செய்தேன்

பெய்திடும் மழை துளியை
வாய்த்திரந்து வாங்கிடும்
சிப்பி தான் உனக்கன்னை
முத்தாக நீயும் பிறந்திருக்க
நான் என்ன தவம் செய்தேன்
பாக்கியமிதை அடைதற்கு ||
சேயானாய் என்னாலே
தாயானேன் உன்னாலே
உனக்கும் எனக்குமிந்த
பந்தம் அரங்கேற நான்
என்ன தவம் செய்தேன்
பாக்கியமிதை அடைதற்கு ||
மொட்டுக்கள் மலராகி
வாசத்தை வீசும் போல்
பாசத்தை பூசுகிறாய்
உந்தன் மூலமிதை யடைய
உன்னை க்கரமேந்த நான்
என்ன தவம் செய்தேன்
பாக்கியமிதை அடைதற்கு ||
பசிவர கொஞ்சுகிறாய்
முத்தமிட்டு கெஞ்சுகிறாய்
அழுதும் மிஞ்சுகிறாய்
தோஷமும் இல்லையதில்
வேஷமும் இல்லையதில்
நேசமே வழியக் கண்டேன் ||
கல்கரைந்து மணலாகும்
இரும்பும் தேய தூளாகும்
தாய் மனதும் அங்கணமே
இன்னிலையை நானடைய
நான் என்ன தவம் செய்தேன்
பாக்கியமிதை அடைதற்கு ||
நோய் நுழைந்து பேயாட்டம்
போடுகின்ற உலகினிலே
ஒலங்கள் திக்கெட்டு மென்
அங்கம் பதறுததை க்கேட்டு
உன்னை க்காத்திடுவேன்
உயிரை ப்பணயம் வைத்து ||
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
என்ன தவம் செய்தேன்:
கவிதைமணியில் / மும்பை