உன் நினைவுகளின் அருகில்
நிசப்தமான நல்லிறவைப் போல் மவுனமாய் ஒரு கனவு
என் கண்களை தட்டுகிறது
மெல்லத் திறந்து எட்டிப் பார்க்கிறேன்..
நெஞ்சில் திட்டுத் திட்டாய்
சாம்பல் போல் உன் நினைவுகள் ஒட்டியிருக்கிறது...
அதன் அருகில் என் உயிர்
படுத்திருக்கிறது...
நரைத்த தலையோடும்
விறைத்த உடலோடும்...
தன் இறுதி நாளுக்காக
காத்திருக்கும் ஒரு முதியவள் போல்