பிரியாவிடை

நூறு நாட்கள் நான் தாயின் கருவறையில்
எனக்கும் அவளுக்குமான தொப்புள்கொடிகளானது எனது வேர்கள்..
தென்றலாய் தினம் தினம் கொஞ்சி மகிழ்வாள் அவள்..
வேர்வைத்துளிகளாலும் கண்ணீர்த்துளிகளாலும் என்னை வாடாமல் இதுவரை வளர்த்தான் வறுமையில் வாடும் என் தந்தை
இதோ எனது பயணம்
சாக்கினுள் தொடங்கி விட்டது
பசியுடன் வழி அனுப்பிய தந்தையிடம் இருந்து பிரியாவிடைபெற்று எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவருக்கு உணவாக பயணிக்கிறேன்
விவசாய தந்தைக்கும்
பூமிதாயிக்கும் கடைசியாக கண்ணீரால் நன்றி செலுத்தும்
உங்கள் அன்பு மகன் நெல்மணி