அழகு

உன் கொஞ்சும் அழகு எனைத் துஞ்ச விடுவதில்லை, கெஞ்சி கேட்கிறேன்
என் முன் தோன்றாதே,
அஞ்சுகிறேன் உன்னில் கரைந்து
போய்விடுவேனோ என்று,
(இப்படி ஒரு நேரம்)
மையல் கொண்ட உனை
காணாது போனாலும் துயில்
கொள்ள முடியாமல் என்
மஞ்சத்தில் பஞ்சும் முள்ளாய்
உறுத்துகிறதே! கொஞ்சம் கருணை காட்டி உன் தரிசனம் தந்து விடு!(இப்படியும் ஒரு பாரம்)
(காதலில் முரண்பாடான சுகங்கள், அவஸ்தைகள்
விடை என்ன இதற்கு?)

எழுதியவர் : பாலமுருகன்பாபு (16-Apr-18, 11:45 am)
சேர்த்தது : BABUSHOBHA
Tanglish : alagu
பார்வை : 90

மேலே