நியதி

#நியதி
பார்க்காத வைத்தியம் இல்லை, போகாத ஹாஸ்ப்பிடல்இல்லை..எவ்வளவு பணம் இதுவரை செலவு செய்தார்கள் என கணக்கு கூட பார்க்கவில்லை..இன்னும் கவிதாவுக்கு உடல் சுகம் பெறவில்லை...அவள் வயது ஒரு 55லிருந்து 60 குள்ளாக இருக்க வேண்டும்..கணவன் இறந்து 10 வருடங்கள்ஆகிவிட்டது..அதிலிருந்து அவளுக்கு பெரிய ஆதரவு,அரவணைப்பு என்று ஒன்றும் இல்லை...

இது வரை அவளுக்காக இருந்த இரண்டு மாடுகளையும் வித்தாயிற்று.. இருந்த அந்த ஒரு சாரி ஓட்டு வீட்டையும் அடமானம் வைத்தாயிற்று..அவளுக்கு என்று பெரிய உறவு பட்டாளம் ஏதும் இல்லை...ஒரு மகன், ஒரு மகள்..மகன் மூர்த்தி, மகள் சுதா... இருவருக்கும் கல்யாணம்,புள்ளக்குட்டி என ஒரு வழியாய் அனைவரும் செட்டில் பண்ணி வைத்து விட்டாள் கவிதா பாட்டி..

மகள் புகுந்த வீட்டிற்கு செல்லவே மகன் மருமகள், இரண்டு பேரன்களுடன் நிம்மதியான வாழ்க்கை ஓடி கொண்டு இருந்தது... மருமகளை கையில் வைத்து தாங்கினாள்.. அப்படியிருந்தும் மருமகள் கொஞ்சம் சிடுசிடுப்பு தான்.. பேரன்கள் இருவரும் இவளுடனேயே ஒட்டிக்கொள்வர்.. அது மருமகளுக்கு பிடிக்காது.. இப்படி ஒரு எதிரும், புதிருமாக வாழ்க்கை ஓடோடிக் கொண்டியிருந்தது...

அப்போது திடீரென ஒரு நாள் மதியம் சாப்பிட்டவுடன் வழக்கம் போல் , உறங்க சென்றால் கவிதா பாட்டி...அப்போது தான் கண் அயர்ந்தாள்...தீடீரென ஒரு பொறுக்க முடியாத வயிற்று வலி, மிகவும் வலியால் துடி துடித்தாள் கவிதா பாட்டி... வீட்டில் யாரும் இல்லை.. மகன், மருமகள் இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர்...தன் வலியை பொறுக்க முடியாமல் கதறி அழுதாள்...
சத்தம் அதிகமாகவே பக்கத்து வீட்டிலிருந்து அமுதம் வந்து பார்த்தாள்..அவள் வந்து "பாட்டி.. என்னாச்சு ஏன் அழுகிறீங்க, இல்லம்மா அமுதம் "வயிற்று வலி"ரொம்ப தாங்க முடியல... அமுதம் ஓடோடி சென்று வலி நிவாரணி மாத்திரைகள் சிலவற்றை எடுத்து வந்து கொடுத்து உதவினால் கொஞ்சம் நேரத்தில் வலி நின்றது...கவிதா பாட்டி கையெடுத்து கும்பிட்டாள்... விடுங்க அம்மா, நான் என் அம்மாவா இருந்தா பார்க்க மாட்டேனா...

கவிதா பாட்டியின் கண்களில் நீர் தாரை வார்த்து கொட்டியது.. "அமுதம், சுதாவிற்கு தோழி என்பதனால் போன் போட்டு நடந்த விஷயங்களை சொன்னாள்"... கோவப்பட்ட சுதா, மூர்த்திக்கு போன் போட்டு கிழி, கிழித்துவிட்டாள்.."அம்மாவை பார்க்க மாட்டியா, கொள்ள மாட்டியா,அப்படி என்ன உனக்கு வேலை பெருசா போச்சு".. உனக்கும், உன் பொண்டாட்டி பிள்ளைங்களுக்கும் ஆக்கி போட மட்டும் தானா அவங்க...போய் முதல்ல அவங்கள கவனி...என்று மூச்சு விடாமல் திட்டி தீர்த்தாள்.. இந்த கடுப்பை மூர்த்தி வீட்டுக்கு வந்ததும்,கவிதாவின் மேல் காட்டினான்.
அம்மா..நான் தான உன்ன பார்த்துகிறேன்..உடம்பு சரியில்லான..எனக்கோ இல்ல என் பொண்டாடிக்கோ போன் அடிக்க வேண்டியது தானே..ஏன் அவளுக்கு அடிச்சு இருக்க...இல்லப்பா நான் அடிக்கலேயே நான் அவள்ட பேசியே 10 நாள் மேல ஆகுது, ஒரு வேல பக்கத்து வீட்டு அமுதம் சொல்லி இருப்பா போல..எப்படி இருக்கா நல்லா இருக்கலாமா.. "ஆமாங்க அவள நான் விசாரிக்காத ஒன்னு தான் கோரச்ச"...


அம்மா, வயித்து வலி தான வேற ஒன்னும் இல்லையே, நாம நாளைக்கு ஆஸ்பத்திரி போவோம்...மறுநாள் காலை ஒரு ஆட்டோவில் கவிதாவை அழைத்துக்கொண்டு ஒரு கிளினிக் ஒன்றிற்கு சென்றான் மூர்த்தி...டாக்டர், கவிதாவின் வயிற்றில் கைவைத்து, இங்க வலி இருக்க, கொஞ்சம் இருமுங்க, நல்லா மூச்சை இழுத்து விடுங்க, என்று சோதனை செய்தார்...
மூர்த்தியிடம், சார் ஒன்னும் பிரச்சினை இல்லை, நீங்க ஒரு ஸ்கேன் மட்டும் எடுத்துட்டு வந்துடுங்க..கிளினிக்ல ஸ்கேன் இல்லாததால் இன்னொரு பெரிய ஆஸ்பத்ரி ஒன்றிற்கு வந்து சேர்ந்தனர்.."சி.டி ஸ்கேன் என்பதால் கூட்டம் அலை மோதியது"அங்கு நேராக சென்றால் ஸ்கேனக்கு 5000 ரூபாய், வேறு டாக்டர் மூலமாக செல்வதால் 6500 ரூபாய்.. மூர்த்தி பணத்தை கட்டிவிட்டு ஸ்கேன் எடுப்பதற்காக வரிசையில் கவிதாவுடன் அமர்ந்தான்..

ஒரு வழியாக கவிதாவின் பெயர் கூப்பிடப்பட்டது..உள்ளே சென்றால் அரைமணி நேரம் ஆனது, ஒருவழியாய் வெளியே வந்தாள்..என்னமா முடிஞ்சதா..இல்லப்பா ஒரு பாட்டில் தண்ணீர் கொடுத்து இருக்காங்க இதுல ஏதோ மருந்து கலந்து இருக்காம், ஒரு மணி நேரத்துல குடிச்சிட்டு திரும்ப எடுக்கணும்மா..அப்புறம் ரிப்போர்ட் மதியம் 2 மணிக்கு தான் தருவாங்களாம்...அதுவரையும் அவள் கவிதா பாட்டி பட்டினி தான்...ஒரு வழியாக ஸ்கேன் எல்லாம் எடுத்து ரிப்போர்ட் வாங்கி, கிளினிக் செல்ல மணி மாலை 4 ஐ தொட்டது..டாக்டர் பார்த்து விட்டு, சார் பாட்டிக்கு பித்த பையில கல் இருக்கு, கவுண்ட் அதிகமா இருக்கு, "மே பி, 7,8 இருக்கு, அது இல்லாம "லிவர் கொஞ்சம் ஸ்வீல்லிங், அதாவது வீங்கி இருக்கு, நீங்க உடனே ஆப்ரேஷன் பண்ணி ஆகணும், இல்லனா ரொம்ப ரிஸ்க்..கவிதா பாட்டி இதை கேட்டதும் அழ தொடங்கினாள், இருவரும் வீட்டிற்கு வந்தனர், சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றனர்..கவிதா பாட்டிக்கு பயம் கை கால் எல்லாம் நடுங்கியது, மறுபடியும் வயிற்று வலி அதிகமானது...கத்தி கதறினாள் மகனும், மருமகளும் வந்து மாத்திரை கொடுத்தனர்...வலி குறைந்து உறங்கினாள் கவிதா பாட்டி...

மருமகள், என்னங்க ஒரே இம்சை கத்திக்கிட்டே கிடக்கு, அக்கம் பக்கம்லா தூங்க வேணாம், என்றாள் அவளை பார்த்து முறைத்தான் மூர்த்தி...

அதன் பின்னர் சில நாட்கள் ஓடோடியது, கவிதா சோறு உண்டு 15 நாட்களுக்கு மேலாகிறது, சோறு உண்டால் வலி அதிகமாகிறது, எனவே, வெறும் நீர் ஆகாரம் தான்...மூர்த்தி, ஒரு வாரம் ஆபிசுக்கு லீவ் போட்டான்..வேறு வேறு டாக்டர், ஹாஸ்ப்பிடல் என அலைந்தனர்..எல்லாம் இடத்திலிம் ஒரு புது, சி.டி ஸ்கேன், எல்லா டாக்டர்களின் பதிலும் ஆப்ரேஷன் என்ற வார்த்தையாகவே இருந்தது...

"இப்படி, அங்கே இங்கே என வைத்தியம் பார்த்ததற்கே,இரண்டு மாடு மற்றும் ஒரு சாரி வீட்டே இலந்தாச்சு, இனிமே எவ்வளவு செலவு ஆகபோகுதோ, என கடிந்து கொண்டாள் மருமகள், மூர்த்தியிடம்.."அவனும், செய்வதறியாது தலை மேல் கைவைத்து உட்கார்ந்து இருந்தான்...இவர்கள் கவிதாவிற்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, உரக்க பேசினர், அது..அவளுக்கும் சிரமமில்லாமல் நன்றாகவே கேட்டது...

வெளியே வந்த, மூர்த்தி..அம்மா நாம சுதாட பணம் கேட்போமா, எப்படியும் 2,3 லட்சம் இல்லாமல் டவுன்போய் ஆப்ரேஷன் பண்ண முடியாது, நான் எல்லா காசையும் போட்டுடன், இவகிட்ட இருக்குற நகையை கேட்ட பிரச்சனை ஆகிவிடும் போல, என்ன பண்றது சுதாட்ட கேட்பமா அம்மா...என்றான்...

இல்ல, தம்பி அது நல்லா இருக்காது, நாம போட்ட நகையா இருந்தாலும் அது அவங்களுடையது, இப்போ கேட்க கூடாது...அப்போ என்ன தான் மா பண்றது, என கடிந்துக்கொண்டு அங்கே தண்ணீருடன் இருந்த ஒரு சொம்பை எட்டி உதைத்தான்...அது சுவற்றில் பட்டு தெறித்து, ஒரு பக்கம் நசுங்கி தரையில் விழுந்தது...

"சனியன், எங்கயாவது போய் தொலைய வேண்டியது தானே, இங்க வந்து உயிரை எடுக்குது...என்று உரக்க சொன்னால் மருமகள்"...என்னங்க நீங்க வாங்க... "வயசாகிடுச்சுல... இனிமே ஆப்ரேஷன் பண்ணி இந்த கிழம் என்ன பண்ண போது, இன்னும் இளமைனு நினைப்பு..."சும்மா கிடக்கட்டும் நீங்க வாங்க..."யே, நீ வேர சும்மா இருடி"..டென்ஷன் பண்ணாத...
என்றான் மூர்த்தி...

அறை கதவை படாரென அடித்து சாத்திவிட்டு,போனான் மூர்த்தி...கவிதா பாட்டியின் கண்களில் நீர் தாரை தாரையாக கொட்டியது..நான் யாருக்கும் பாரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை...என்னால் யாருக்கும் கஷ்டம் வேண்டாம்...என்னால் யாருக்கும் சண்டை சச்சரவு வேண்டாம்...என நினைத்தவள் ஒரு தீர்க்கமான முடிவையும் எடுத்தாள்...

மறுநாள் காலை ஆறு மணி, மருமகள் அறையில் இருந்து வந்து, குடங்களை எடுத்து கார்ப்பரேஷன் தண்ணீரை பிடித்து வைத்துவிட்டு, வாசலில் தொங்கும் பையில் உள்ள பால் பாக்கெட்டை எடுத்து கொண்டு உள்ளே , வந்தவள் " தீடிரென குடத்தை கீழே போட்டவளாய் ,அத்தை இப்படி பண்ணிட்டிங்கே" என்று... கத்தினாள், குடம் கீழே விழுந்த சத்தமும், அவள் கத்தியதும் மூர்தியையும் அக்கம், பக்கத்தினரையும் எழுப்பியது...

"மூர்த்தி, வெளியே வந்தவனாய் அம்மா இப்படி பண்ணிட்டியே, எங்களலாம் விட்டுட்டு போய்ட்டியே,என்று கதறி அழுதான்.. பேரன்களும்... பாட்டி ...பாட்டி என தேம்பி அழ ஆரம்பித்தனர்...

-முகம்மது முஃபாரிஸ். மு

எழுதியவர் : முகம்மது முஃபாரிஸ்.மு (16-Apr-18, 12:28 pm)
Tanglish : neyadhi
பார்வை : 220

மேலே