அன்பு மகள்

தங்க யிழைகள் யொழி மின்னிட
பூவிதழ்கள் போர்த்திட்ட மேனியாள்!
ஆனந்தம் குன்றா வழங்கும்
அட்சய முகத்தாள்!

நிலவை குடைந்து இருளை புகுத்த விழிகள் பொழியும் அன்பொளியாள்!
கொட்டும் அருவிகளும் நின்றே கேட்கும்
இனிய பேச்சுடையாள்!

இதழ் மொட்டும் நனி சொட்டும் நறுவீகளும்
புன்னகை சிந்த கற்கும் நகையாள்!

மின்மினிகள் போர்த் தொடுக்க
இரவு கரிவிழிகள் சாய்ந்து போக
இப்பென்னிலவு யொளி தொடுக்க
யென் இன்னல்கள் வீழ்ந்து போகும்!

பட்டாம்பூச்சி் சிறகை விரிக்கும் பொற்பாதம்
இவளைத் தொட்டால் போதும்
என்றே கூடும் கார்மேகம்!

இவள் விளிக்க என்பெயரும் அழகானதோ!
இவளு ரைக்கும் கதைகளில் யென்
செவிகள் தீரா பசியானதோ!

கரமிடை தாங்கி நிற்கும் காட்சியோ
இறை மரை யொளி வீசிடும் கம்பீரம்

இவளின் ஒவ்வொரு அசைவில் மயங்கியே
பூக்களும் ஒவ்வொரு விதநிறமாய் பூக்குதே!
யென் மனமோ நரம்புகளால் பூட்டி
இன்பயிசை மீட்டுதே!
கிடையூரும் நதியும் செங்குத்து நடை
போடுமி வள்நடை கண்டால்!

என் வாழ்நாள் தான் நீளாதோ
என் மரணமும் இவளிடம் தோற்காதோ!

எழுதியவர் : ச. செந்தில் குமார் (16-Apr-18, 6:30 pm)
சேர்த்தது : ச செந்தில் குமார்
Tanglish : anbu magal
பார்வை : 9781

மேலே