கல்வியில் வேண்டும் மாற்றம்
மாணவர் வாழ்கயிலான மாற்றம் இந்தியாவின் வருங்காலத் தூண்களைச் சிறப்பாக்குமே
வாழ்க்கைக்குப் பொருந்தாக் கல்வியை ஒழிப்போம்
வாழ்வியலோடு இணைந்த கல்வியையே ஏற்போம்
கல்வியின் விழுதுகள்தான் சமூகத்தின் நிகழ்வுகள்
கல்வியில் சீர்திருத்தம் சமூகத்தின் வேர்த்திருத்தட்டும்
நாடு சிறந்திட வேண்டுமாயின் சமூகமும்
சமூகம் சிறந்திட வேண்டுமாயின் கல்வியும் சிறந்திட வேண்டும்
தன்னம்பிக்கையையும் தற்காப்பையும் கற்றுத் தரும் கல்வியையே வேண்டுவோம்
உயர்ந்தோன் தாழ்ந்தோன் ஏற்றத்தாழ்வில்லாக் கல்வியையே வேண்டுவோம்
இளமையிலே நீர்மேலாண்மையைப் பழக்குவோம்
முதுமையின் அனுபவத்தைக் கற்பித்தலுக்குப் பயன்படுத்துவோம்
இயற்கைக் கல்வியை அவசியமாக்குவோம்
உழுதலின் உன்னதச் சிறப்பை உணர்த்தும் கல்வியை வரவேற்போம்
ஊழலில்லா சமூகம் பிறக்க வழி செய்வோம்
உழைப்பில்லா மனிதக் கூட்டம் பொசுங்கிட விதி செய்வோம்
இலட்சியக் கனவு அமைத்தே கனவு மெய்ப்பட வைக்கும்
கல்வியே இன்றைய தேவை
மாணவ சக்தி மகத்தான சக்தி ; மாணவ சக்தியே !
நீ மறுமுறை உள்ளத்தே வெடித்து உணர்வால் ஒன்றுவாயானால்
அது உனக்கு உயிரூட்டும் ஒருவக்காக ,
உன்னை வாழவைத்து மடிந்து கொண்டிருக்கும் ஒருவனுக்காகவே இருக்கட்டும்
விழித்தெழு மாணவ சமுதாயமே !
வீறுகொண்டு எழுந்திடு காட்டாற்று வெள்ளமாய் கட்டுக்களை அறுத்தெறிந்து
புறப்படு நமது விடியலை நோக்கி....................