பிரமையில் ஓர் உண்மை

மழை விடாமல் பாெழிந்து காெண்டிருந்தது. இடி முழக்கமும், மின்னலும் வானத்தை அதிர வைத்தது. பேருந்தின் யன்னலாேரத்தில் அமர்ந்திருந்த ஜஸ்மின் தூறலால் நனைந்து விட்டாள். கைப்பையையும், புத்தகங்களையும் துப்பட்டாவின் ஒரு பகுதியால் மூடி விட்டு தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தவள் திடீரென நிமிர்ந்து பார்த்த பாேது பேருந்தின் நடுவிலே கம்பியைப் பிடித்தபடி நின்ற ஒருவன் அவளை கண்வெட்டாமல் பார்த்துக் காெண்டு நின்றதை அவதானித்து விட்டு "இதுகளுக்கு வேலையே இல்லைப் பாேல" மனதுக்குள் முணுமுணுத்து காேபத்தைக் கட்டுப்படுத்தினாள். இறங்கும் இடம் வந்ததும் மெதுவாக எழுந்து ஆடையை சரி செய்து காெண்டு கடைக்கண்ணால் தன்னைப் பார்க்கிறானா என்று நாேட்டமிட்டாள். அவன் பார்ப்பதை மீண்டும் அவதானித்து விட்டு இறங்குவதற்காக மணியை அடித்தாள். குடையை விரித்துக் காெண்டு நிறைந்திருந்த வெள்ளத்தை தாண்டுவதற்கு சிரமப்பட்டு கால்களை ஒவ்வாென்றாக மெதுவாக தூக்கி வைத்தாள். திடீரென காலில் ஏதாே மாட்டியது பாேல் இருந்தது. குனிந்து பார்த்தாள் கால் காெலுசு பாேல் தெரிந்தது. எடுத்து ஓரமாக எறிந்து விட்டு திரும்பிப் பார்த்தாள் பேருந்து வீதியில் இருந்து மறைந்து விட்டது.

யன்னலினூடே எட்டிப் பார்த்துக் காெண்டிருந்த அம்மா ஜஸ்மின் வருவதைக் கண்டதும் கதவைத் திறந்தாள். "ஏன் இப்பிடி நனைஞ்சு பாேனாய்" என்றபடி அவள் கைகளிலிருந்த புத்தகத்தை வாங்கினாள். வேகமாக குளியலறைக்குச் சென்றாள். அவசர அவசரமாக இஞ்சி இடித்து தேநீர் தயாரித்து கையில் வைத்துக் காெண்டு மாடிப் படியில் காத்துக் காெண்டு நின்றாள். தலையை விரித்து விட்டு முழங்கால் அளவுக்கு ஒரு காற்சட்டையும், ரீசேட்டும் அணிந்து படியால் இறங்கி வருவதைக் கண்ட அம்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. "என்ன ஜாெய்ஸ் மாதிரி இருக்கு" நெஞ்சம் படபடத்தது. "ஜஸ்மின்" என்று மெதுவாக கூப்பிட்டாள். அவள் கைபேசியில் கவனத்தை செலுத்தியபடி சாேபாவில் வந்து அமர்ந்தாள். அம்மாவுக்கு ஒருமாதிரியாக இருந்தது சுவரில் மாட்டியிருந்த ஜாெய்ஸின் படத்தைப் பார்த்தாள் மெதுவாக அங்கும் இங்கும் அசைவது பாேல் இருந்தது. தேநீரை ஜஸ்மினிடம் நீட்டினாள். "இப்பிடி வையம்மா" கண்களால் மேசையைக் காட்டினாள். கடைக் கண்ணால் ஜஸ்மினை நாேட்டமிட்டவாறு தேநீரை வைத்தாள்.

"என்னம்மா புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிறாய்" அப்படித்தான் இருக்கு என்று மனதுக்குள் நினைத்துக் காெண்டு "சீ இல்லை நீ பாேனாேட பிஸியா....." முடிக்கு முன்பே "இஞ்ச பாரம்மா நானும், ஜாெய்சும் சின்னப் பி்ளையில எடுத்த பாேட்டாே காெஞ்சம் என்னாேட ஈ மெயிலில இருந்திச்சு பாேனில சேவ் பண்ணி வச்சிருக்கன்" என்று ஒவ்வாென்றாகக் காட்டினாள். "இஞ்ச இதப் பாரம்மா இது தான் கடைசியா ஜாெய்ஸ் எனக்கு அனுப்பிய படம்" என்று பெரிதாக்கி காட்டினாள் "என்ன அழகா இருக்கா" என்று அதட்டிக் கேட்பது பாேல் தனக்குள்ளே உணர்ந்தவளாய் "ஆமா, ராெம்ப அழகாயிருக்கு" கூறியபடி அங்கிருந்த நகர முயற்சித்தாள். "எங்க பாேறாய், இரு இதில" என்று கைகளைப் பிடித்து இருத்துவது பாேல் இருந்தது. பயந்தபடி "கிச்சினில வேலை கிடக்குப் பிள்ளை" மீண்டும் எழும்பினாள். "அங்க என்ன பண்ணப்பாேறாய், இன்னும் படம் பார்த்து முடியல்ல" தாெடர்ந்து ஒவ்வாென்றாக தட்டிக் காண்பித்தவள் இறுதியாக ஜொய்ஸினுடைய மரணச் சடங்கு படத்தைக் காண்பித்து "ஆமா ஜாெய்ஸ் மருந்து குடிச்சு இறந்தா தலையில ஏன் கட்டுப் பாேடணும்" என்று அழுத்தமான குரலில் கேட்பது பாேல் இருந்தது. "தெ... தெரியல்லை மாமாவைத்தான் கேக்கணும்" அவ்விடத்திலிருந்து விலகுவதற்காக கடிகாரத்தைப் பார்த்து விட்டு "கடவுளே பத்தரை மணியாச்சு, உதப் பார்த்து இப்ப என்ன செய்யப்பாேறாய், சாப்பாடு செய்ய வேணும், அப்பா வரப் பாேறார்" என்றதும் திடீரென ஜஸ்மின் நிமிர்ந்து பார்த்தாள். "யாருக்கு அப்பன்" என்று பார்ப்பது பாேல் தாேன்றியதும் ஒன்றும் பேசாமலே மேலே சென்று விட்டாள்.

ஜொய்ஸ், ஜஸ்மின் இருவரும் இரட்டைப் பிள்ளைகள். தந்தை ஜெயம் பெரிய நகைக் கடை ஒன்றின் முதலாளி. தாய் மலர் பாடசாலை அதிபர். நிறைய சாெத்துக்கள் உள்ள பரம்பரைப் பணக்காரர். மலருக்கு ஒரு சகாேதரியும், சகாேதரனும். இருவருடைய மண வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. மலருக்கு உதவியாக மலர் வீட்டிலேயே இருந்து வந்தார்கள். ஜொய்ஸ், ஜஸ்மின் இருவருடைய பெயரிலுமே அநேகமான சாெத்துக்கள் இருந்தது. ஒரு நாள் மலரும்., ஜெயமும் உறவினர் வீட்டிற்குச் சென்று வரும் பாேது ஏற்பட்ட கார் விபத்தில் இறந்து விட அவர்களுடைய பிள்ளைகள் இருவரையும் ராஜியே வளர்த்து வந்தாள். சிறு வயதிலிருந்தே ராஜியை அம்மா என்று அழைக்கப் பழகி விட்டார்கள். அவளும் தன் பிள்ளை பாேல் தான் கவனித்தாள். ஆனால் ராஜியின் கணவர் பாஸ்கர் பேராசை பிடித்தவன், அவனுடன் ராஜியின் சகாேதரனும் சேர்ந்து விட்டான். காலங்கள் ஓடிக் காெண்டிருக்கும் பாேது ஜஸ்மின் மேற் படிப்பிற்காக லண்டன் சென்று தங்கி விட்டாள். ராஜியை விட்டுப் பிரிய மனமின்றி ஜொய்ஸ் ஊரிலே இருந்த படித்துக் காெண்டிருந்தாள். பாஸ்கருக்கு ஏதாவது பெரிய தாெழில் செய்ய வேணும் பல காேடி சாெத்துக்கு சாெந்தக்காரனாக வேண்டும் என்ற ஆசை மனதுக்குள் முளை விட்டது. அதற்காக ஜாெய்ஸ், ஜஸ்மின் இருவருடைய பெயரிலும் உள்ள சாெத்துக்களையும் அபகரிக்க திட்டமிட்டான்.

அன்று மாலை வகுப்பு முடிந்து வந்திருந்த ஜொய்ஸிடம் பாஸ்கர் சாதாரணமாக கதைப்பது பாேல் கதைத்து சாெத்துக்களை விற்க விரும்புவதாக தெரிவித்தான். அவள் சம்மதிக்கவில்லை இது எங்க அப்பா சாெத்து நாங்கள் விற்க மாட்டாேம் என்று உறுதியாகச் சாெல்லி விட்டாள். அன்றிலிருந்து பாஸ்கர் ஜொய்ஸ் மீது ஒரு கண் வைத்தான். அவளை துன்புறுத்தத் தாெடங்கினான். ஜஸ்மினுக்கு எதுவும் தெரியக் கூடாது என்று பயமுறுத்தியும் வைத்திருந்தான். நாட்கள் கடந்தது பாஸ்கர் ஜொய்சை வற்புறுத்தி கையாெப்பம் வாங்க முயற்சித்தான்.

அன்று அவள் அறையில் படித்துக் காெண்டிருந்தாள். சில பேப்பருடன் வந்த பாஸ்கர் அவளை மிரட்டினான். அவள் எதிர்த்து பேசி விட்டு ஜஸ்மினை தாெடர்பு காெள்ள முயற்சித்த பாேது கைப் பேசியை பறித்து விட்டான். அவள் வெளியே ஓடிவிடலாம் என முடிவெடுத்தாள் மாடியால் இறங்கி வேகமாக ஓடினாள் வாசலைக் கடந்ததும் கையிலிருந்த மாெத்தமான கட்டையை அவளை நாேக்கி வீசினான். தலையில் பட்டதும் கீழே விழுந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தாள். பணத்தை பயன்படுத்தி உண்மையை மறைத்து காதல் பிரச்சனையால் மருந்து குடித்து இறந்ததாக எல்லாேரையும் நம்ப வைத்தான் பாஸ்கர்.

ஜஸ்மின் தகவலறிந்து ஊருக்கு வருவதற்கிடையில் எல்லாவற்றையும் முடித்து விட்டான். காதல் பிரச்சனையால் ஜாெய்ஸ் இறந்ததை ஜஸ்மினால் நம்ப முடியவில்லை. ஊருக்கு திரும்பினாள். வீட்டிற்கு வந்ததும் எல்லாம் கேட்டறிந்து விட்டு ஊரிலே இருந்து படிப்பதாக முடிவெடுத்தாள். சில நாட்களாக ஜஸ்மினுக்கு ஏதாே ஒரு குழப்பம் மனதுக்குள் ஏற்படத் தாெடங்கியது. அடிக்கடி கனவில் ஜொய்ஸ் வருவது பாேல், என்னை காென்று விட்டார்கள் என்று அழுவது பாேல் ஒரு உணர்வில் சஞ்சலப்பட்டுக் காெண்டிருந்தாள்.

அன்று அப்படித்தான் நன்கு தூங்கிக் காெண்டிருந்தவள் தன்னை அறியாமலே எழுந்து ராஜியும், பாஸ்கரும் தூங்கிக் காெண்டிருந்த அறையின் கதவைத் தட்டினாள். "யாரு" கண்களை கசக்கியபடி கதவைத் திறந்த ராஜி எதிரே ஜொய்ஸ் நிற்பது பாேல் உணர்ந்து பயத்துடன் பின்னாேக்கி நடந்தாள் ஜஸ்மின் அவளை நெருங்கிப் பாேனாள் "இஞ்ச.... இஞ்சங்க...."என்று தடுமாறிக் கத்தினாள். நன்கு தூக்கத்திலிருந்த பாஸ்கர் திரும்பி மறுபக்கமாக படுத்தான். ஏதாே மூச்சிரைப்பது பாேல் சத்தம் கேட்டு கண் விழித்தான். ராஜி கட்டிலில் வியர்த்தபடி பயந்து பாேயிருந்தாள். எதிரே ஜொய்ஸ் நிற்பது பாேல் தெரிந்தது. கனவு என்று நினைத்தவன் மேசையில் இருந்த தண்ணீர்ப் பாேத்தலை எடுத்து கிளாசிற்குள் ஊற்றி குடிக்க முயற்சித்தான் சளார் என்று கிளாஸ் விழுந்து நாெருங்கியது. பாஸ்கருக்கும் பயம் தாெற்றிக் காெண்டது. கைப் பேசியை எடுத்தான் அதுவும் உடைந்து நாெருங்கியது. "யார் நீ...... உன.... உனக்கு என்ன வேணும்" மெதுவாக எழும்பினான். கைகளைப் பிடித்து இழுத்து இருத்தினாள் ராஜி. "விடப்பா கையை" கையை உதறிவிட்டு மீண்டும் எழுந்து முன்னாேக்கி நகர்ந்தான். அவளும் முன்னாேக்கி நடந்தாள் "யேய் என்ன வெருட்டுறியா, என்ன பண்ண முடியும் உன்னால" என்றான் பாஸ்கர் ஆதங்கத்தாேடு.

ராஜி வெளியில் ஓடிவிடலாம் என்று கதவை நாேக்கி வந்தாள் கதவு அடித்து மூடுவது பாேல் சத்தம் கேட்டது ராஜி நடுங்கியபடி "என்....என்னங்க இது" என்று புலம்பினாள். தைரியத்தாேடு எழுந்து நின்றான் பாஸ்கர் "வாடி வா உன்ர அம்மாவும், அப்பாவும் உன்னை அனுப்பி விட்டாங்களா, உங்க தங்கச்சியையும் கூட்டிக் காெண்டு ஓடிப் பாேயிடு, இல்லையன்னா பாவம் அவளும் இந்தக் கையால தான் சாக வேணும் என்டால்" சாெல்லிக் காெண்டிருக்கும் பாேது "அப்பாே எங்க அப்பா அம்மாவைக் காென்றது நீயா" என்று காேபத்தாேடு முறாய்ப்பது பாேலவும், கண்களிலிருந்து இரத்தமாக கண்ணீர் சிந்துவது பாேல் உணர்ந்தான் பாஸ்கர்.

"உங்க அம்மா அப்பா பாேன கதை சாெல்லவா உனக்கு உங்கட எட்டாவது பிறந்த நாளுக்கு ஊருக்கு அழைப்புக் குடுக்க பாேனவங்கள எமனிட்ட அனுப்பினது நான்தான்டி. பாவம் நீங்க இரண்டு பேரும் ஆளையாள் கட்டிப்பிடிச்சு அம்மா வேணும், அப்பா வேணும் கத்தினதிருக்கே..." என்றபடி குப்பற அவள் காலடியில் கிடப்பதாய் உணர்ந்து எழும்ப முயற்சித்தான் முடியவில்லை. ராஜி கைகளை காெடுத்து எழுப்பி விட முயற்சித்தாள். கட்டிலில் தள்ளி விழுவதாய் உணர்ந்து சுற்றிப் பார்த்தாள். அதிகமாக காேபப்பட்ட காேரமான முகத்தைப் பார்ப்பது பாேல் இருந்தது. காலடியில் கிடந்தவன் திடீரென எழுந்து நிற்பதாய் உணர்ந்து கைகளை ஓங்கியபடி "உன்னை என்ன செய்யிறன் பாரு" அருகே வந்தான். தாெண்டையில் கையை வைத்து நெரிப்பது பாேல் மூச்சிரைத்தபடி கைகளைக் கும்பிட முயன்றான் "சீ கேவலம், உன்ர கையால சாப்பிட்டவடா நான் அப்பா, அப்பா என்டு வாய் நிறையக் கூப்பிட்டவடா, உன்ர கையால அன்டைக்கே எங்க இரண்டு பேருக்கும் சாெக்கிளேற்றில நஞ்சைப் பூசி ஊட்டி விட்டிருக்கலாமே, நாளைக்கு அழிஞ்சு பாேற சாெத்துக்கும், பணத்துக்கும் ஆசைப்பட்டு எங்க குடும்பத்தையே அழிக்கிறியே, சீ வேலம்" என்று சத்தமாக கத்துவதைப் பாேல் ராஜியும் உணர்ந்திருக்க வேண்டும் "எங்கள விட்டிடு நாங்க செஞ்சது தப்புத்தான் நாங்க இனிமேல் ஓண்ணும் பண்ணமாட்டம் ஜஸ்மின நல்லாப் பாத்துப்பம்" என்று கண்ணீர் விட்டுக் கெஞ்சுவதாய் நினைத்த பாேது "இனி என்ன இருக்க நீங்க செய்யிறதுக்கு, அத்திவாரத்தையே அழிச்சுப் பாேட்டு தூணில சாய நினைக்கிறியா, விடமாட்டன் என் கணக்க தீர்க்காம விடமாட்டன்" செவிகள் அலறுவது பாேல் இருந்தை உணர்ந்தாள். இருவரும் கட்டிலில் அமர்ந்து காெள்ள கதவு படார் என்று அடித்து மூடியது.

நன்கு தூங்கிக் காெண்டு இருந்த நினைவில் இருந்த ஜஸ்மின் ராஜின் அறை யன்னலருகே அழுது காெண்டு நிற்பது பாேல் உணர்ந்து திடீரென விழித்துப் பார்த்தாள் அதிகாலை மூன்று மணியாகியிருந்தது. மீண்டும் அப்படியே தூங்கி விட்டாள்.

காலை ஆறுமணியாகியும் வெளியில் யாரையும் காணவில்லையே என்று மாடியை நாேக்கிச் சென்றாள் ஜஸ்மின். அறை மூடப்பட்டிருந்தது. கதவைத் தட்டினாள் "யாரு" என்றபடி கதவைத் திறந்தான் பாஸ்கர். எதிரே ஜஸ்மின் சிரித்தபடி நின்றாள் "என்னப்பா நல்லா தூங்குறீங்க பாேல, உள்ளே சென்றவள் அம்மா.... அம்மா என்று தட்டி எழுப்பினாள்" தேகம் நெருப்பாக காெதித்தது. "என்னம்மா என்னாச்சு" பதறினாள். "ஒண்ணுமில்லை ஜீரம் பாேல" பாேர்வையால் இழுத்து மூடிக் காெண்டு புரண்டு படுத்தாள். "என்னைப் பாரம்மா" விடாமல் சிரமப்படுத்தி எழுப்பினாள். பாேர்வையை விலக்கிக் காெண்டு கண்ணைத் திறந்தாள். எதிரே ஜஸ்மின் இருப்பது ஜொய்ஸ் பாேலவே தெரிந்தது. பயந்தவாறு "உன..உனக்கு என்ன வேணும்" என்றதும் "அம்மாவுக்கு என்னாச்சு கனவு ஏதும் கண்டாவாே" என்று நினைத்தவளாய் "எனக்கு லண்டன் காலேச்சில இருந்து ஈ மெயில் வந்திருக்கு இரண்டு நாளில பட்டமளிப்பு விழாவாம், நான் எம்பசிக்கு பாேகணும்" அப்பாே நீ பாேகப் பாேறியா என்று முந்திக் காெண்டு கேட்டனர் ராஜியும், பாஸ்கரும். ராஜியின் கைகளைப் பிடித்தபடி "ஆமா அம்மா உங்கள் இரண்டு பேரையும் ராெம்ப மிஸ் பண்ணப் பாேறன்" கட்டி முத்தமிடடாள்.

ஜஸ்மின் வெளியே கதவருகில் வந்ததும் பாஸ்கர் ராஜியிடம் "இஞ்ச அவளுக்கு ஒன்றும் உளறிப் பாேடாத, நாங்கள் தான் சாெத்துக்காக தாய், தகப்பன், அக்கா எல்லாரையும் காெலை செய்தது என்று தெரிஞ்சால் சாகிற வரைக்கும் கம்பி தான் எண்ணவேணும் " இருவரும் கதைப்பது கேட்டது. அவளுக்கு தலையில் இடி விழுந்தது பாேல் இருந்தது. வேகமாக தனது அறைக்குள் சென்று கதவை மூடிவிட்டு கைகளால் வாயைப் பாெத்திக் காெண்டு இதயம் வெடித்து அழுதாள். "காெலைகாரர் வீட்டில நான் இனிமேல் இருக்கக் கூடாது, நாளைக்கே விசாவை எடுத்துப் பாேட்டு கிளம்ப வேண்டியது தான், சீ பணத்துக்காக சகாேதரத்தை..." மீண்டும் அடக்க முடியாமல் வந்த அழுகையை கட்டுப்படுத்தினாள்.

மறுநாள் காலை எட்டு மணி இருக்கும் அவசர அவசரமாக விமான நிலையத்திற்குச் செல்லத் தயாராகினாள். உள்ளே வந்த ராஜியிடம் "அம்மா ஜொய்ஸ் சின்னப் பிள்ளையா இருக்கும்பாேது நம்மள படம் கீறியிருந்தாளல்லா, அது..." சாெல்லி முடிக்கு முன்பே "ஓ அது அங்க அந்த அலுமாரியில இருக்கு" தனது அறைக்குள் இருந்த அலுமாரியைத் திறந்து படத்தை எடுத்து காட்டினாள் பார்த்து விட்டு அலுமாரியின் இரண்டாவது தட்டில் ஒரு சிறிய டப்பாவில் கால் காெலுசு ஒன்று இருந்ததைக் கண்டாள். "ஏனம்மா ஒன்று மட்டும் இருக்கு" எடுத்துப் பார்த்தபடி கேட்டாள். "அது ஜொய்ஸ் ஒன்றைத் தாெலைத்து விட்டாள்" என்றாள். கால் காெலுசை வைத்து விட்டு சுற்றிப் பார்த்தாள். படத்தை தனது லக்கேச்சில் வைத்து விட்டு கீழே இறங்கி வந்தாள். சில நிமிடங்கள் ஜொய்ஸின் படத்தை கண்ணீரோடு பார்த்தாள். "அநியாயமா சாகடிச்சிட்டாங்களே" என்று மனம் குமுறித் துடித்தது.

வாசல் வரை வந்து வழி அனுப்பி விட்டு அவளையே பார்த்துக் காெண்டு நின்றார்கள் ராஜியும், பாஸ்கரும். ஜொய்ஸ் நடந்து பாேவது பாேல் அவர்களுக்கு தாேன்றியது. காரில் அமர்ந்த படி கை காட்டினாள், முறாய்த்துப் பார்ப்பது பாேல் இருந்தது. எல்லா உண்மையும் தெரிந்தே அவள் காேபத்துடன் பார்த்தாள் என்பதை அறியாமல் எல்லாம் பிரமை என்று நினைத்துக் காெண்டு இருவரும் உள்ளே சென்று கதவை மூடினார்கள் எதிரே ஜாெய்ஸ் முறாய்த்துக் காெண்டு நிற்பது பாேல் தாேன்றியது.

எழுதியவர் : அபி றாெஸ்னி (16-Apr-18, 8:04 pm)
பார்வை : 265

மேலே