வாழும் வழி

ஒருவன் தொழில் நஷ்டம் தாங்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்தான்.
தூக்கு கயிறு, விஷம், கத்தி,
துப்பாக்கி, கிணறு, ரயலில் விழுவது என பல யோசனைகளை ஒரு காகிதத்தில் எழுதினான்,
இதில் எது சாவதற்கு சுலபமான வழி என்று குழப்பமாக இருந்தான்,
அவனது8வயது மகன் இது
குறித்து தந்தையிடம் வினவினான், தந்தையும்
இதில் எது சுலபமான வழி என்று யோசிக்கிறேன் என்றார், மகன் கேட்டான்"
அப்பா, சாவதற்கு இவ்வளவு வழிகள் இருக்கும் போது
வாழ்வதற்கு ஒரு வழி கூடவா கிடைக்காது போய்விடும், என்று கேட்டான், தந்தை வெட்கி தலை குனிந்தான், தற்கொலை எண்ணத்தை
கைவிட்டு மகனை கட்டி அணைத்து கொண்டு கண்ணீர் விட்டான்,
பிறந்த பின் வாழ்வதற்கு சிந்திக்காவிட்டாலும்
சாவதற்கு முடிவெடுக்கும் முன் ஒரு நிமிடம் சிந்தித்து
பின்னால் திரும்பி இவ்வுலகை பாருங்கள்,
உங்களுக்கு கை கொடுத்து தூக்கி விட எத்தனையோ மனிதர்கள் காத்திருப்பது
தெரியும்●

எழுதியவர் : பாலமுருகன் பாபு (16-Apr-18, 5:23 pm)
Tanglish : vaazhum vazhi
பார்வை : 130
மேலே