எங்கும் காண்பாய் நெஞ்சே

கதை என்பார்,
அதில் குறையென்பார்,
இறை தூதரென்பார்,
அளவில்லா அன்பை போதித்தாரென்பார்,
அந்த போதனையை சிறிதும் நினைத்து வாழாதாரே...

வாழ்ந்தென்ன சாதித்தாய் சாதியென்ற கட்டுக்குள்?
வாழ்ந்தென்ன மகிழ்வித்தாய் மதமென்ற கட்டுக்குள்?
எல்லாம் வெறித்தனம்.
பழிக்கு பழியென்று கொக்கரிக்கும் செயலாய் அரங்கேறும் வெறித்தனமே...

நரனாய் நாற்றமெடுக்கும் மாமிசத்தை ருசிக்கத் துடிக்கும் கொடும் மனதால் என்ன சாதித்தாய்?
என்ற கேள்வி காதுகளிலே ஒலிக்க,
யாவும் தன்னிலே தேடப்படும் தேடல்கள் என்றிருக்க,
அரக்கன் என்னைக் கொன்று,
அன்பன் என்னைக் காக்க
அன்பே நீ வர வேண்டும் என்றே நாளும் ஓயாத இந்த பித்தனின் புலம்பல்கள் எங்கெங்கும் ஒலிக்கும்...

அன்பன் நானே மீண்டு வருவேன்,
அன்பன் என்னை மீட்டு வருவேன்,
ஞானம் என்றே அன்பிருக்க,
அஞ்ஞானத்தில் வாழ்வது முறையோ?
உன் நிழலும் காரி உமிழ்கிறதே உன் செயல் கண்டு.

மர்மம் என்றுரைக்க மர்மம் ஏதும் அங்கில்லை,
சித்தம் தெளிந்தார் மனதிலேயே...

தேனை உண்டு வாழும் தேனீக்கள், தங்கள் செயல் மலர்கள் மரணிக்கின்றன என்றே அறிந்தால் உண்ணா நோன்பு கொண்டே உயிரை விட்டிருக்குமே!
நிரந்தரமாய் மலர்களும் பூத்திருக்குமே,
எங்கும் காண்பாய் நெஞ்சே!

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (16-Apr-18, 9:59 pm)
பார்வை : 516

மேலே