மனதின் வீழ்ச்சியடா
மனதின் வீழ்ச்சியடா மனிதா,
இது உன் மனதின் வீழ்ச்சியடா,
கோபத்தில் வீழ்ந்தாயடா,
சாபத்தில் மூழ்கினாயடா,
பொய்யில் புரண்டாயடா,
புனிதம் மறந்தாயடா.
இதுவே மனதின் வீழ்ச்சியடா மனிதா,
உன் மனதின் வீழ்ச்சியடா,
பணத்திற்காக ஓடுகிறாயடா மனிதா,
அதிகாரம் தேடுகிறாயடா மனிதா,
பதவிக்காகப் பாவம் செய்கிறாயடா,
சுயநலம் மிகுந்த பாரினில் திரிகிறாயடா மனிதா,
இதுவே உன் மனதின் வீழ்ச்சியடா மனிதா,
உன் மனதின் வீழ்ச்சியடா.
புகார் மேலே புகார் அடுத்தவர் மேலே சொல்கிறாயடா மனிதா,
உன்னுள்ளே பார்க்க மறந்தாயடா மனிதா,
போராட்டங்களுக்காக உழைக்கிறாயடா மனிதா,
உன் நிலை என்னவென்று அறியாமலே ஓடுகிறாயடா மனிதா,
மனதின் வீழ்ச்சியடா மனிதா,
இது உன் மனதின் வீழ்ச்சியடா.
நீயாக நீ வாழ மறந்தாயடா மனிதா,
உடல் போதையிலே எல்லை மீறினாயடா மனிதா,
கொலைகள் புரிந்தாயடா மனிதா,
பெண் சிசுவையும் கற்பழிக்கிறாயடா மனிதா,
மனதின் வீழ்ச்சியடா மனிதா,
இது உன் மனதின் வீழ்ச்சியடா,
மன வைராக்கியம் இல்லையடா மனிதா,
உன் வீரமும் புதைந்ததடா மனிதா,
மனிதன் என்ற அடையாளம் தொலைத்தாயடா மனிதா,
பிரிவினை வெறிக்குள்ளே வீழ்ந்தாயடா,
மனதின் வீழ்ச்சியடா,
இது உன் மனதின் வீழ்ச்சியடா...