உயிரான என் நட்பு

நட்பின் இலக்கணமே!
நண்பனாகிய என் தோழனே!

நான் விதையாக மாற நினைத்தேன்
நீ நிலமாய் மாறினாய்!

நான் முத்தாக மாற சிந்தித்தேன்
நீ சிற்பியாக மாறினாய்!

நான் மழையாக மாற எண்ணினேன்
நீ கருமேகமாய் மாறினாய்!

நான் இறக்கவேண்டுமென்று நினைத்தேன்
நீ என் முன் சடலமானாய்!

நீ என்னை முந்திசெல்வதாய் கருதினேன்
ஆனால் இப்போதுதான் உணர்ந்தேன்
நீ என்னைக் காத்து செல்கிறாய் என

உன் தோழமையை சொல்ல வார்த்தைகள் இல்லை
என்னோடு இன்று நீயும் இல்லை
இனிமேல் இந்த உயிரும் எனதில்லை

நரகத்தில் இருந்தாலும் சரி - நீயிருந்தால்
நரகமும் எனக்கு சொர்கம் தான்

உன்னைத் தேடி நான் வருகிறேன்
என்னை ஏற்பாயா தோழா?

எழுதியவர் : ஸ்ரீ (17-Apr-18, 1:14 pm)
Tanglish : uyirana en natpu
பார்வை : 1405

மேலே