தொடும் தூரத்தில் சிகரங்கள்
சுப்ரஜா...
ஒரு பூங்காவனமும்
பிருந்தாவனமும்
நிறைவாய் இருக்கிறது
உனது குழந்தைத்தனம்
நிறைந்த அழகுச் சிரிப்பில்...
ஒரு கோடி நிலவுகள்
ஒன்று கூடினாலும்
அதற்கு ஈடாகாது
பெற்றோர் எமக்கு இவ்வுலகில்...
இன்னின்னாரிடம் இவ்வாறு
பழக வேண்டும் என்பதில்
நீ ஒரு பள்ளிக்கூடம்...
இல்லை இல்லை
ஒரு பல்கலைக் கழகம்...
நீ கற்றுக் கொண்டவற்றுள்
எல்லாம் இதுதான் முக்கியம் ..
இது நாங்கள் செய்த பாக்கியம்...
பிறந்தவீட்டு மகிழ்ச்சி
புகுந்த வீட்டிலும்
தழைக்கச் செய்வாய்
அன்பில் திளைக்கச் செய்வாய்...
படிப்பில் உனது
நாட்டமும் ஆர்வமும் தரும்
உந்து சக்தியில்
சிகரங்கள் உனக்கு
தொடும் தூரத்தில்...
மின் வாரியக் கனவு
இனிதே பலிக்கட்டும்...
உயர்வெல்லாம் தனது
உழைப்பில்தான்...
எனும் உண்மையை
தக்க சமயத்தில் உணர்ந்து
செயல்படுவோருக்கு
நினைத்ததை தன் கையகம்
நிச்சயம் தரும் இந்த வையகம்...
ரேவதி சுப்ரஜா
அதற்கு நல்ல உதாரணம்...
முயற்சியும் பயிற்சியும்
இவளுக்கு மிகச் சாதாரணம்...
நடனத்தில் உனது ஈடுபாட்டில்
நாட்டியம் சில அபிநயங்களை
உன்னிடம் கற்றுக்கொள்ளும்...
நீ பாடும் இனிமையில் இசை
இனிய சில ராகங்களை தன்னோடு
சேர்த்துக்கொள்ளும்...
திறனும் உழைப்பும்
ஒருங்கே அமைந்த
ரேவதி சுப்ரஜாவிற்கு
பள்ளி கல்லூரி பணிகளில்
சிறப்பிடம்... இன்னும் இவளுக்கு
இருக்கிறது முதன்மையிடம்...
ரேவதி சுப்ரஜா... இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
உனது உழைப்பெனும்
தவத்தில் இறைவனின்
வரங்கள் வசந்தங்களாய்
என்றும் பவனி வரட்டும்...
வாழ்க பல்லாண்டு...
ஆரோக்கியம் முதலாய்
வளங்கள் பல பெற்று...
திட்டங்கள் தீட்ட
திட்டமிடுவாய்...
இலக்கை அடைய
உழைத்திடுவாய்...
பெருமைகள் பல
பெற்றிடுவாய்...
வாழ்த்துக்கள் பல...
அன்புடன்...
அம்மா & அப்பா...
👍🙏🎂🍰👏🙋🏻♂😀