விதவையின் காதல்

பசி தீராயோ
என்
பசி தீராயோ....!!!

மெய் தீண்டும்
காற்று
அவனின்
பொய் காட்டிச்
சிரிக்கும் ..

அடர் காட்டில்
காமம்
தொலைத்த
நான் ஒரு
தனி மரம் ..

பசி தீராயோ
என்
பசி தீராயோ....!!!

மோக அனலால்
என்
ஆடையும்
அவ்வப்போது
எரிந்து போகும் ..

கார்மேகக்
கூந்தலும்
என்
முகடுகளின்
முலை தீண்டித்
தொலைக்கும் ..

பசி தீராயோ
என்
பசி தீராயோ....!!!

நகங்கள்
கீறல்களாய்
பொய் இடையின்
மெய் தீண்டி
பசி தீர்க்கும் ..

கழுத்து
நனைக்கும்
வியர்வை
மார் தொடுமுன்
தொலைந்து
போகும் ....

பசி தீராயோ
என்
பசி தீராயோ....!!!

கூடா
ஒழுக்கம்
மனிதனுக்கும்
விதி
விலகாகட்டும் ..

காதல் துளிர்த்து
காமம் மேனியில்
காவியம்
படைக்க
எழுத்தாணி மட்டும்
காணாமல் போனதோ !!??

பசி தீராயோ
என்
பசி தீராயோ....!!!

கூரைமேல்
தனித்திருக்கும்
குருவியாய்
நான் ...!!

மஞ்சள்
குளித்து
மஞ்சம் விரட்ட
மதுரத் தேன்
வாய் விழாதோ...??

அவன் ருசித்த
என் இடையின்
எச்சம் இன்று
நிலம்
விழுகிறது ...

பசி தீராயோ
என்
பசி தீராயோ....!!!

தினசரி
போராட்டம்
இரவும் கொல்லும்
என்
இளமையும்
கொல்லும் ..

கனவில்
நித்தமும்
கலவி
நடத்துவோம் ...

காலையில்
பனியோடு
நம்
காதல் பயணமும்
கற்பனையில்
இனிதாய்
தொடரட்டும் ...

எழுதியவர் : ஸ்வீட்லின் (19-Apr-18, 2:37 pm)
சேர்த்தது : sweetlin
பார்வை : 182

மேலே