காதல் ஆட்சி

மஞ்சள் நிலா ஊரும்
பளிங்குச் சிலை முகம்
ரோஜா மலர் கொண்டு
தைத்த செவ்வாய்
கயல் நீந்திக் கரையேறும்
கண் விரி கால்வாய்
இது அழகு மந்திரம்
உலவும் மலர் வனம்
குரலில் நயம் தவழும்
மெல்லின யந்திரம்
மொழியில் மொழிதலில்
செதுக்கிய பெண் வசீகரம்
என் கனவிலும் நினைவிலும்
கலையாமல் நிற்கும் அவளுருவம்
என்னைக் கொல்லாமல் கொல்லுது
இந்த இளங்காளைப் பருவம்
அஷ்ரப் அலி