காகிதக் கப்பல்

காகிதத்தில்காகிதக் கப்பல் கப்பல் செய்து ஓடும் நீரில் ஓடவிட்டு கூடவே ஓடி குதித்து விளையாடிய காலங்கள்
நினைவுகளில் நிழலாகிறது
முதுமையை எய்தியப்  பின்பும் தனிமை வகிக்கும் நேரத்திலே

எனக்குள் நானே சிரிக்கின்றேன்
பார்ப்பவர் கண்களுக்கு நான் பைத்தியக் காரனென பேசப்படுகிறேன் அந்த காலம் மறுபடியும் வாராதோவென்று ஏங்க வைக்கிறது

சிறுபிராயத்திலே நாம்
விளையாடிய விளையாட்டு
ஆனந்தத்தையும் அறிவையும் கொடுத்தது இதனை சொல்வதற்கு கவிஞன் தேவையில்லை
அனுபவித்தவன் போதும்
•••

ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
"காகிதக் கப்பல்"
கவிதைமணியில்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (19-Apr-18, 3:30 pm)
Tanglish : kaakithak kappal
பார்வை : 200

மேலே