நற்றிமிர்
![](https://eluthu.com/images/loading.gif)
வாழ்க்கை வானத்தில்,
துயர வானிலையோ…,
நற்றிமிரே..!
உச்சத்தில் கொட்டிய
கனமழையின்
எச்சத்துளிகளுடன்
கை கோர்க்காமல்,
நற்றிமிரே…!,
உன்னத வானிலையில்
உதித்தெழும் ஆதவன்
வரைய இயலுமா, உன்
வாழ்வில், வானவில்லை.,
நற்றிமிரே…?
நற்றிமிர் உனக்கழகாம்
நற்றிமிரே…! அதை
குற்றமென களையாதிரு
நற்றிமிரே…! நற்றிமிரே…!
நற்றிமிர் கொள்க!