என் தன்நம்பிக்கை
வணக்கம் தோழா !
என் மீதுள்ள
நம்பிக்கையில் "தன்னம்பிக்கை" பற்றிய
சில வரிகள் உனக்காக !
முடியாது என்பது
முடியாதவன் வாக்கு
முடியும் என்றே
முடித்து காட்டு !
முடியாதென்றால்
மடுகூட மலையாகும் !
முடியுமென்றால்
மலைகூட மடுவாகும்!
வலியை
பொறுக்க பொறுக்கத்தான்
பாறைக்கூட
சிலையாகும்!
நீ
தோற்க தோற்கத்தான்
வெற்றி உந்தன்
வசமாகும்!
முயன்று இயலாமல்
தோற்றால் - நீ வீரன் !
முயலாமல்
தோற்றால் - நீ கோழை !
நீ வீரனா ? கோழையா ?
முடிவு கொள்! மனதில்
உறுதிகொள் !
நீ நடைபோட
பாதை தேடு - இல்லையா ?
புதிய பாதை
நீயே போடு ! - வருவான்
ஆயிரம் ஆயிரம் பேர்
உன்னோடு !
இறுதியாய்
நானறிந்த உலகம்
உனக்காக !
இல்லை என்பான்
இருப்பதை கொடுப்பாய்
உன்னை
கர்ணன் என்பான்!
மீண்டும் மீண்டும் கேட்பான்
இல்லை என்பாய்
அவனே உன்னை
கஞ்சன் என்பான் !
கொடுத்ததை கேட்ப்பாய்
இவன் பணத்தில் கறார் என்பான் !
போகட்டும் விடு என்பாய்
ஏமாளி ஏமாந்தான் என்பான் !
உடையில்
எளிமை கொள்வாய்
ஊர்நாட்டான் வருகிறான் என்பான் !
அழகாய்
உடையையை உடுத்தி பார்ப்பாய்
கரடிக்கு எதுக்கு ?
கண்மை என்பான் !
உனக்கும் எனக்கும்
ஒற்றை பேச்சு !
உனக்கு பின்னால்
ஏகத்துக்கும் பேச்சு !
இதை செய்தால்
இதுவும் குற்றம் !
அதை செய்தால்
அதுவும் குற்றம் !
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசும் !
புறமொன்று பேசி
உள்ளொன்று நினைக்கும் !
இதுவே உலகம் !
ஆக !
அகமோ? புறமோ ?
பேசட்டும் உலகம்
விட்டு விடு !
நீயே சரியென
சென்று விடு !
ஒருநாள்
உலகம் வசமாகும் !