மண்ணுக்குள் ஒரு காதல்

தன் கூந்தலில் மலரை சூடி இறுக்கமாக அணைத்தபடி கட்டிலில் விழுந்தான்.
இரவு நேரம்
நிலா வெளிச்சம்
வயலுக்கு நடுவில்
கயிற்றுக் கட்டிலில்
சில்லென்ற காற்றில்
அவளை மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
தன் கணவனுக்கு
தன்னையே அர்ப்பணித்து விட்டாள்.
தன் வலியை மறைத்து
தன்னை அவருக்கு பரிமாறிக் கொண்டிருக்க....
அவள் நெஞ்சு வலியில் துடித்தும்
மறைக்கிறாள் என்று தெரியாத வண்ணம் அவளின் முகம் இருந்தது.
அவரை அவள் பூரணமாக ஏற்றுக்கொண்டாள்.
இப்பொழுது போர்வைக்குள்
உயிரை உயிருக்குள் கோர்த்து
உடலை உடலால் கழுவி
இடைவெளி இல்லா ஓர் உயிராய் பரிசுத்தமாகிறார்கள்.
அவள் அவனை அணைத்து
கண் மூடி விட்டாள்.
அவன் அவளின் மார்பில் தலை வைத்து கை கோர்த்து உறங்கினான்.
விடிந்து விட்டது
அவளின் தேகம் சில்லென்று இருப்பதை உணர்ந்து
கண் விழித்தான்.
எழுந்தவன் பிரபா என்று பயந்து அவளை அசைத்து எழுப்புகிறான்.
எந்த வித அசைவும் இல்லை.
நீண்ட போராட்டத்தில் கண் திறந்து
என்னங்க என்று உயிரை கையில் பிடித்துக் கொண்டு மௌனமாய் அழைத்தாள்...
அவள் உயிர் உடல் நிற்க துடிக்க
போர்வை அசைந்து கொண்டே இருந்தது...
பார்ப்பவர்கள் புன்னகைத்து சென்றார்கள்.
வலி அவள் உயிரை வாட்டி எடுத்தது.
உடனே சிறிது நேரத்தில் அவள் உயிர் பிரிந்தது.
அவன் நெஞ்சில் அடித்து அழுகிறான்.
அவள் சொன்னது போல் எனக்கு முன் இறந்து விட்டாளே..
என்னை தனியே தவிக்க விட்டு போய்விட்டாளே என்று கதறுகிறான்.
அவனின் கதறல் கேட்டு ஓடி வருகிறார்கள்.
அவளின் தாலியை மார்பில் இருந்து எடுத்து கையில் வைத்து அழுதான்.
எல்லோரும் காண
அவள் வைத்த பூ வாடவில்லை.
அவள் குங்குமம் கலையவில்லை...
சுமங்கலியாக அவன் கையில் இறந்து கிடந்தாள்.
அவன் தாலியை மீண்டும் அவள் கச்சை கடந்து மார்போடு அணைத்து வைத்தான்.
தாலி மேலே இருக்கக் கூடாது.இதயத்தோடு தான் எப்பொழுதும்
இருக்க வேண்டும் என்பாள்.
அவளை தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.ஊரே அவன் பின்னால் அழுதபடி வந்தது.
அவளை சுமந்து கொண்டே இருந்தான்.
புதைப்பதற்காக குழி எடுத்து விட்டார்கள்.
பள்ளத்தில் இறங்கி அவளை கிடத்தி விட்டு
அவள் மீது படுத்துக் கொண்டான்.
வாப்பா என்று கூப்பிட்டும் அவர் வரவில்லை.
அவரை தூக்க அவர் இறந்து விட்டார் என்று அறிந்து
அவனை அவள் மீதே விட்டு விட்டார்கள்.
பின் இருவர் மீதும் மண்ணை போட்டு மூடி புதைத்து விட்டார்கள்....

மண்ணுக்குள் ஒரு காதல் உறங்குகிறது.
~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (21-Apr-18, 8:43 am)
பார்வை : 428

மேலே