சிதைந்து போகாதா
அன்பே
என்ன நினைத்து வாடுகிறாயோ?...
இல்லை
என்னை நினைத்து வாடுகிறாயோ?...
ஒளி கொண்ட
உன் கண்களில்
வலி கொண்டு கண்ணீர்
சிந்தினால் -- எப்படி
நானிருப்பேன் என்று
என்றேனும் நினைத்ததுண்டா?...
மஞ்சள் முகமது
மலர்ந்து இருந்தால்
வாழ்நாள் முழுவதும்
நான் மகிழ்ந்து இருப்பேன்!
சிவந்த கன்னத்தை
உன் கைகள் தாங்கினால்- என்
சின்ன இதயமது சிதைந்து போகாதா?...!!