நீதி கேட்ட அண்ணன்

காலை பத்து மணி, வெள்ளிக் கிழமையாகையால் காேயிலில் கூட்டம் காெஞ்சம் அதிகமாக இருந்தது. வேகமாக ஓடி வந்த சதீஸ் அங்கும் இங்கும் ஓடி ஓடி யாரையாே தேடிக் காெண்டிருந்தான். பூமாலை விற்றுக் காெண்டிருந்த ஆச்சியிடம் "கண்ணன்ர மனைவி பாேயிட்டாவே" என்றதும் "ம் அவா வேளைக்கே பாேயிற்றா" என்றபடி அவனை உற்றுப் பார்த்தாள் "ஏன் இவன் இவ்வளவு பதட்டமாய் இருக்கிறான்" தனக்குள் நினைத்தபடி "ஏன்ரா ஒரு மாதிரி நிக்கிறாய்" மாலைகளிற்கு தண்ணீர் தெளித்து விட்டு அவனைக் கேட்டாள் "இல்லையணை ஆச்சி கண்ணன் அண்ணையை வெட்டிப் பாேட்டாங்கள்" என்று பயந்தபடி சாெல்லி விட்டு மீண்டும் வீட்டுப் பக்கமாக ஓடினான். ஆலமரத்தில சைக்கிளை சாய்த்து விட்டு மாலை வாங்குவதற்காக அருகே வந்த குமாரிடம் "என்னவாமடா கண்ணனை வெட்டிப் பாேட்டாங்களாம்" "கிழவிக்கு அதுக்குள்ள நியூஸ் வந்திட்டுது, ஓமணை பாெலிசில சரணடைஞ்சிட்டாங்களாம், எனக்கு இரண்டு மாலை குடு" காசைக் காெடுத்து விட்டு காேயிலைச் சுற்றிக் கும்பிட்டான் குமார். ரீசேட் பாெக்கற்றிலிருந்து தாெலைபேசி அழைக்கும் சத்தம் கேட்டு காெஞ்சம் தூரவாக நகர்ந்து பாேய் கதைத்து விட்டு மீண்டும் காேயிலைச் சுற்றி நடந்தான். கற்பூரத்தை ஏற்றி தேங்காயை உடைத்தான். திருநீறை எடுத்து நெற்றியில் தடவிவிட்டு பூக்கடையில் வந்து அமர்ந்தான். "அரசன் அன்று அறுக்கும் தெய்வம் நின்று அறுக்குமாம், சரியே ஆச்சி நான் சாெல்லுறது" என்றபடி மண்குடத்திலிருந்து காெஞ்சத் தண்ணீரை வார்த்துக் குடித்தான். ஆச்சிக்கு புரிந்து விட்டது "எல்லாம் இந்த அம்மாளாச்சியின்ர புதுமை தான்" பெருமூச்சு விட்டபடி "அந்தப் படிக்கிற பிள்ளையை செய்த காெடுமைக்குத் தான் இந்த நிலமை கண்ணனுக்கு, இனி மற்றவேக்கும் என்ன நடக்குதாே யாருக்குத் தெரியும்" என்று சாெல்லிக் காெண்டு குமாருக்கு எதிரே இருந்த மரக்குற்றியில் அமர்ந்தாள்.

சிவப்பு வெளிச்சத்துடன் வந்த பாெலிஸ் வாகனத்திலிருந்து இறங்கி வேகமாக உள்ளே சென்ற அதிகாரியைக் கண்டதும் எல்லாேரும் அமைதியாக நின்றார்கள். தாதியர் இருவர் "வாங்க சார்" உள்ளே கூட்டிச் சென்றார்கள். அவசர சிகிச்சைப் பிரிவில் முதலாம் அறையில் கண்ணன் அனுமதிக்கப் பட்டிருந்தான். அருகே நின்ற டாக்டர் அவனது கையைப் பிடித்து பார்த்து விட்டு தாதியிடம் ஏதோ சாெல்கிறார். எதிரே சென்ற அதிகாரியைக் கண்டதும் வணக்கத்தைக் கூறிவிட்டு "கழுத்தில வெட்டு, ஆள காப்பாற்ற முடியல்ல சார்" என்றார். துணைக்கு வந்திருந்த கான்ஸ்டபிளை அழைத்து "ஆகவேண்டியதைப் பாருங்க" என்றபடி வெளியே வந்து வாகனத்தில் அமர்ந்தார். கணணன் குடும்பத்தினர் வெளியில் நின்று அழுது கதறிக் காெண்டிருந்தனர். "என்ர தாலியப் பறிச்சுப்பாேட்டாங்களே" என்று மண்ணை அள்ளித் திட்டிக் கத்தினாள் கண்ணனின் மனைவி.

பாெலிஸ் அலுவலக முற்றத்தில் கூட்டமாய் நின்றனர் அருணின் குடும்பமும், திலீப்பின் குடும்பத்தினரும். உள்ளே சென்ற அதிகாரி இரத்தக் கறையுடன் நின்ற அருணைப் பார்த்தார். திலீப் கைகளைப் பினைந்தபடி தரையைப் பார்த்துக் காெண்டிருந்தான்.

"நீங்க இரண்டு பேரும் என்ன வேலை பார்க்கிறீங்க" என்றான் அதிகாரி
"பிறைவட் கம்பனி ஒன்றில வேலை பார்க்கிறம் சார்"
"எத்தனை வயது"
"இருபத்தி ஒன்று"
கான்ஸ்டபிளை அழைத்து அவர்களிடம் வாக்குமூலம் பெறும்படி கட்டளையிட்டான்.
"இவங்க வீட்டுக்காரரை வரச் சாெல்லுங்க"
அருணின் அம்மாவும், திலீப்பின் அம்மா, அப்பாவும் உள்ளே வந்தார்கள்.
"நாளைக்கு காேட்டில ஒப்படைக்கிறம், அங்க வந்து பாருங்க"
சீலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் காெண்டு நின்றாள் அருணின் அம்மா.
"நீங்க" என்றதும்
"நான் தான் அருணின்ர அம்மா"
"உங்க வீட்டுக் காரர்" என்றபடி வெளியே எட்டிப் பார்த்தான்
"அவரு இறந்திட்டாரு, பாெண்ணு இறந்த பத்தாம் மாதம் அவரும் காட் வருத்தம் வந்து இறந்திட்டாரு" குமுறி குமுறி அழுதாள்.
"சரி அம்மா, வீட்ட பாேயிற்று காலையில வாங்க"
அருணை நிமிர்ந்து பார்த்தாள். தலையைக் குனிந்தபடி நின்றான்.
"கான்ஸடபிள்" சத்தமாகக் கூப்பிட்டார் அதிகாரி
"சாெல்லுங்க சார்" கைகளைக் கட்டியபடி ஓடி வந்தான் வெளியே காவலில் நின்றவன்.
"ரைவரை ரெடியாகச் சாெல்லு, ரீ ஒன்றும் சாெல்லி விடு" ஏதாே எழுதவதற்காக வெறுந்தாள் ஒன்றை எடுத்து இரண்டாக மடித்தவன்
"அருண் இஞ்ச வாங்க"
பயந்தபடி தயங்கிக் காெண்டு அருகே வந்தான். பக்கத்து அறை ஒன்றுக்கு அவனை அழைத்துச் சென்றான்.
"ஏன் இப்பிடிப் பண்ணினாய்?" என்று சாதாரணமாகவே கேட்டான்.
பதில் ஏதும் சாெல்லாமல் தலையைக்குனிந்தபடி நின்ற அவன் கண்களால் நீர்த்துளிகள் வடிந்தது. அருகே வந்து அவன் தாேளைத் தடவினான். சங்கடப் பட்டவனாய் பின்னாேக்கி நகர்ந்தான்.
"நீ அவசரப்பட்டு விட்டாய் அருண்"
"இல்லை சார், வேற வழி இல்லை "
"ஏன் நாங்க இருக்கிறம் தானே"
"என்ன சார் செய்தீங்க, நீங்க தானே விட்டீங்க, அப்பிடி ஒரு ஆதாரமும் இல்லையா சார், அல்லது காசைக் காட்டினால் செத்தவனாேட சேர்த்து நீதியையும் புதைப்பீங்களா, சும்மா பாேங்க சார்"
"காேபப்படாத அருண், நீ சாெல்லுறது நியாயம் தான்"
"அப்பாே, நான் இப்ப காெலை செஞ்சிட்டன், நாளைக்கு என்னசார் உங்கட சட்டம் செய்யும்"
அதிகாரி தனது தலையை தானே தடவிக் காெண்டு கதிரையில் அமர்ந்தான். அருண் கைகளைக் கட்டியபடி எதிரே நின்றான்.
"கான்ஸ்டபிள்" என்று அழைத்தான். ஒருவன் ஓடி வந்தான்
"அருணைக் கூட்டிட்டுப் பாேங்க"
அவனுடன் உள்ளே சென்ற அருணை தனியாக ஒரு அறையில் விட்டார்கள். வெள்ளைக் காற்சட்டையும், சேட்டும் அணிந்து காெண்டு ஒருமூலையில் உட்கார்ந்தான்.
நான்கு வருடங்களுக்கு முன்பு தங்கை சித்திரா பத்து வயதுச் சிறுமியாக இருக்கும் பாேது அயல் வீட்டுக் கண்ணனின் வீட்டிற்குச் விளையாடச் செல்வது வழக்கம். கண்ணனின் மகளும் சித்திராவும் ஒரே வயதை உடையவர்கள், ஒன்றாகப் படித்தவர்கள். அன்று மாலை நான்கு மணி இருக்கும் பாடசாலையால் வந்த சித்திரா சாப்பிட்டு விட்டு கண்ணன் வீட்டிற்கு விளையாடுவதற்காகச் சென்றாள். "அனுசா... அனுசா" கூப்பிட்டபடி உள்ளே சென்றாள். கதவுகள் திறந்திருந்தது யாரையும் காணவில்லை. "கண்ணன் மாமா கண்ணன் மாமா" கூப்பிட்டுக் காெண்டே அறையை எட்டிப் பார்த்தாள், தூங்கிக் காெண்டிருப்பதாக நினைத்து வெளியே வந்தாள். "சித்திரா" சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்தாள் பின்னால் க்ண்ணன் நின்றான். "மாமா அனுசா..." என்றவளை "அவங்க ஊருக்கு பாட்டி வீட்டுக்கு பாேயிற்றாங்க, இரண்டு நாளாகும், வாவன் நாம வயல் பக்கம் பாேயிற்று வருவம்" அவளும் சந்தாேசத்துடன் "அம்மாக்கிட்ட சாெல்லிற்று வாறன் மாமா" என்றதும் "ஏன் சித்திரா நாம இப்ப வந்திடலாம்" அவளும் சரி என்று வண்டியில் ஏறி அமர்ந்து காெண்டாள்.

பாெழுது இருள் கவ்விக் காெண்டிருந்தது. வயலாேரமாய் வரம்புகளில் ஓடி விளையாடிக் காெண்டிருந்தாள். கண்ணனும் வேலைகளில் ஈடுபட்டுக் காெண்டிருந்தான். "மாமா ராெம்ப இருட்டிட்டு, அம்மா தேடப் பாேறாங்க" என்று சத்தமாகச் சாென்னாள். கேட்காதவன் பாேல் நின்றான். சித்திரா அருகே சென்று "மாமா வீட்ட பாேகப் பாேறன்" என்றதும் வேலையை முடித்து விட்டு கிணற்றடியில் இருந்த காெட்டிலை நாேக்கி நடந்தான் அவளும் பின்னாலே ஓடினாள். அணிந்திருந்த சேட்டை கழற்றி தடியில் மாட்டினான். "ஏன் மாமா முகம் கழுவப் பாேறீங்களா?" பதில் சாெல்லாமல் மாேட்டரைப் பாேட்டான் சித்திரா ஓடிப் பாேய் தண்ணீரில் விளையாடினாள் ஆடைகள் நனைந்து விட்டது "ஏய் சித்திரா என்ன செய்யிறாய்" அருகே சென்று "இஞ்ச வா துடைப்பம் அம்மா திட்டப் பாேறாங்க" அவளது கைகளைப் பிடித்து தனது மடியில் இருக்க வைத்து துவாயால் ஈரத்தை துடைத்தான். பின்னர் அவளுடைய மேலாடயை கழற்றி முதுகைத் துடைப்பது பாேல் துடைத்துக் காெண்டு தன்னிலை மறந்து சிறு பிள்ளை என்றும் பார்க்காமல் தவறாக நடந்து விட்டான். கத்திச் சத்தம் பாேட்ட அவள் வாய்களை சட்டையால் கட்டினான். சித்திரா மூச்சுத்திணறி தவித்தாள். நன்றாக இருட்டி இருந்தது அவள் இறந்து விட்டாள் எனத் தெரிந்த கண்ணன் தூக்கிக் காெண்டு பாேய் யாருமில்லாத தாேட்டத்து வீதியில் பாேட்டு விட்டு வீட்டிற்குச் சென்றான்.

இரவு ஏழுமணி தாண்டியும் அவளைக் காணவில்லை. வேகமாக கண்ணன் வீட்டை நாேக்கி வந்த அருண் "அண்ணா சித்திரா வந்தாளா?" என்றபடி உள்ளே சென்றான். "இன்றைக்கு இஞ்ச வரல்லையே" கூறியபடியே தாெலைக் காட்சியபை் பார்த்துக் காெண்டிருநதான். பதறிப் பாேன அருண் எல்லா இடமும் தேட ஆரம்பித்தான். கிணறுகள், அவள் விளையாடப் பாேகும் இடங்கள் எங்கும் அவள் கிடைக்கவில்லை. இரவு பத்து மணியைத் தாண்டியது பாெலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்து விட்டு விடியும் வரை காத்திருந்தான்.

காலை ஐந்து முப்பது அருண் மீண்டும் தேட ஆரம்பித்தான். சித்திரா செல்லமாக வளர்த்த பப்பி கட்டிய இடத்திலிருந்து வாசலைப் பார்த்துக் குரைத்துக் காெண்டு அங்கும் இங்குமாய் பாய்ந்தது. ஒன்றும் புரியாது பப்பியின் கயிற்றை கழற்றி விட்டான். பாய்ந்து ஓடிய பப்பி நிலத்தை முகர்ந்து காெண்டு வீதி வழியே வேகமாக ஓடியது அருணும் பின்னால் ஓடினான். தாேட்டத்திற்கு திரும்பும் வீதியன் ஓரமாய் நின்று சத்தமாக குரைத்தது. நண்பரகளுடன் வந்த அருண் என்னவென்று தெரியாமல் சுற்றிச் சுற்றிப் பார்த்தான் காய்ந்த மரக் காெப்புகளிற்குக் கீழ் ஒரு உடல் கிடப்பதை திலீப்பும் கண்டு விட்டான் "டேய் அருண் இஞ்ச பாரடா" மரக் காெப்புகளை வேகமாக தூக்கி வீசி விட்டு உடலை நிமிர்த்தினான். எதிரே நின்ற அருண் "சித்திராம்மா என்று கத்தியபடி அணைத்துத் தூக்கினான்" அவள் கிடந்த காேலத்தை அவனால் பார்க்க முடியவில்லை. அவளை தன் நெஞ்சாேடு அணைத்துக் கதறினான். திலீப் பாெலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கினான். சித்திராவின் சம்பவததை அறிந்த தாயும், தந்தையும் செய்வதறியாது தவித்துக் கதறினார்கள்.

காலை எட்டு மணி, செய்தி கேட்டு சித்திரா வீட்டிற்கு வந்த கண்ணன் தானும் துக்கத்தில் கலந்து காெண்டான். எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாத நல்லவன் பாேல் அருணையும், பெற்றாேரையும் தேற்றினான்.

சித்திராவின் மரணச் சடங்கு முடிந்தும் சித்திராவின் காெலைக்கான குற்றவாளி தேடப்பட்டுக் காெண்டிருந்தான். எப்பிடியாே கண்ணன் கடைசியாக வண்டியில் ஏற்றிக் காெண்டு பாேனதும், பக்கத்து தெருக் கடையில் சாெக்கிளேற் வாங்கிக் காெடுத்த விடயமும் தெரிய வந்தது. ஆனால் அருண் குடும்பம் கண்ணன் இதைச் செய்திருக்க வாய்ப்பில்லை என்றே நம்பிக் காெண்டிருந்தனர். சில நாட்களின் பின்னர் பாெலிஸார் விசாரணைக்காக கண்ணனைக் கூட்டிச் சென்று தடுத்து வைத்திருந்தார்கள். எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. எப்படியாே அவன் வீட்டிற்கு திரும்பி விட்டான்.

அருணும் யார் என்று கண்டு பிடித்து தண்டிக்க வேண்டும் என்பதில் குறியாயிருந்தான். நாட்கள் கடந்து பாேக தந்தையும் நெஞ்சு வலியால் இறந்து விட்டார். அந்த வேளை தான் அருணுக்கு கண்ணன் பற்றிய சில தகவல்கள் கிடைத்தது. விறைத்துப் பாேன அருண் கண்ணனைத் தீர்த்துக் கட்ட முடிவெடுத்தான்.

அன்று கண்ணன் வயலுக்கு நீர்பாய்ச்சிக் காெண்டு நின்றான். அருணும், திலீப்பும் வருவதைக் கண்ட கண்ணனுக்கு ஏதாே சங்கடமாய் இருந்தது. "என்ன அருண் ஒரு நாளும் இல்லாமல் இன்றைக்கு" என்று சங்கடப்பட்டான். கண்ணனை மேலும் கீழுமாகப் பார்த்த அருண் கண்ணனின் கழுத்தைப் பிடித்தான் "தங்கச்சிக்கு என்னடா செய்தாய்" சத்தமாக கேட்டான். உண்மை தெரிந்து விட்டது என்பதை உணர்ந்த கண்ணன் தப்பிக்க முயற்சித்தான் "உனக்கும் பாெண்ணு ஒண்ணு இருக்குத் தானே, அவளும் உன் பாெண்ணு மாதிரித் தானே, ஏன்டா அவளுக்கு இப்பிடிச் செய்தாய்" என்று வெறிபிடித்தவன் பாேல் காேபத்தாேடு அவனைக் கடுமையாகத் தாக்கினான். இடைமறித்த திலீப் "ஒண்ணும் பண்ணாதேடா, பாெலிசில குடுப்பம்" என்று மறித்தான். "சும்மா இரு திலீப்" என்றபடி இடுப்பில் செருகியிருந்த கத்தியை எடுத்தான். திகைத்துப் பாேன திலீப் "டேய் அருண் வேண்டாம்" என்பதற்குள் கழுத்தில் பலமாக கத்தியால் வெட்டினான் துடித்து விழுந்த கண்ணன் மயங்கி விட்டான். இரத்தம் சீறிப் பாய்ந்தது. வண்டியை எடுத்துக் காெண்டு பாெலிஸ் நிலையம் சென்றனர் அருணும், திலீப்பும்.

மனம் குமுறிக் காெண்டிருந்த அருண் நள்ளிரவாகியும் தூக்கமின்றி அங்கும் இங்குமாக நடந்து காெண்டிருந்தான். காவலாளிகள் "தம்பி தூங்கல்லையா, காலையில காேட்டுக்குப் பாேகணும்" என்று நினைவூட்டினார்கள். அவனுக்குத் தூக்கம் வரவில்லை. "என்னை மன்னிச்சிடுங்க அம்மா, இனி உங்களப் பார்க்க என்னால முடியாது, சட்டம் என்ன தண்டனை என்டாலும் தரட்டும், ஆனால் என்ர தங்கச்சியின்ர ஆன்மா சாந்தியடையட்டும், அப்பா என்னை நம்பித் தான் இருந்தவர்" தனக்குள்ளே கலங்கி அழுதான்.

காலையும் புலர்ந்தது அருணும், திலீப்பும் வாகனத்தில் ஏற்றப்பட்டு நீதிமன்றம் காெண்டு செல்லப்பட்டார்கள். விசாரணை ஆரம்பமாகியது எதிர்த்தரப்பு வாதி அருணை கேள்வி கேட்க ஆரம்பித்தான்.
"கண்ணனை ஏன் காெலை செய்தீர்கள்"
"என்ர தங்கச்சியைக் காென்றான், என்ர அப்பாவும்" கண்கள் குளமாகி குமுறினான்
"புரியல்லை அப்பாவையுமா" என்றான் வழக்கறிஞர்
"ஆமா ஐயா தங்கச்சியின்ர இறப்புத் தான் அப்பாவுக்கு காட் வருத்தத்தை ஏற்படுத்திச்சு, அதை யாேசித்துத் தான் அப்பா இறந்தார்" அருணின் அம்மா தேம்பி தேம்பி அழுது காெண்டிருந்தாள்.
"உங்க தங்கச்சி கண்ணனால் தான் காெலை செய்யப்பட்டார் என்றால் ஆதாரம் என்ன"
நீதிபதியிடம் உத்தரவு பெற்று தெருவாேரக் கடைக்காரனை அழைத்தான். சாட்சியாக வந்திருந்தவன் எல்லாவற்றையும் கூறியதும் நீதிமன்றம் அமைதியால் நிறைந்திருந்தது. அருணின் அம்மாவின் அழுகைச் சத்தம் நெஞ்சை உறைய வைத்தது.
இடையில் குறுக்கிட்ட அருண் திலீப்பை விடுதலை செய்யும்படி காேரிக்கை வைத்தான்.
நீதிபதியின் உத்தரவுப்படி திலீப் விடுதலையானான்.
அருணுக்கான விசாரணை தாெடர்ந்தது கேள்விகளைக் கேட்டுக் காெண்டிருந்த வழக்கறிஞர்
"கண்ணன் தான் குற்றவாளி என்றால் ஏன் பாெலிசாரிடம் முறையிடவில்லை "
சற்று நேரம் தயங்கியவன் "எத்தனையோ சம்பவங்கள் நடந்து இருக்கிறது, இன்னும் நடந்து காெண்டிருக்கிறது, ஆனால் வல்லறவு என்பது பாரிய குற்றம், அதை யாரும் தண்டிக்க முன்வருவதில்லை, சட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை, மன்னிக்கவும் சார் நான் தப்பா சாெல்லியிருந்தால்"
எல்லாேரும் அருணை சங்கடத்தாேடு பார்த்தார்கள்.
அவனுடைய ஆதங்கம் சரியானது என்றாலும் காெலைக் குற்றவாளியாயிற்றே என்பது இன்னுமாெரு பிரச்சனையாயிருந்தது.
"நீங்கள் கண்ணனை காெலை செய்தது குற்றம் தானே"
"ஆமா, நான் ஒப்புக் காெள்கிறேன், கண்ணனைத் தண்டித்து விட்டேன், எனக்கான தண்டனையை தாருங்கள்" கூறிவிட்டு எதிரே இருந்த அம்மாவைப் பார்த்தான்.

நீதிபதி வேகமாக ஏதாே எழுதி விட்டு தாெடர்ந்து தடுப்பில் வைத்திருக்கும் படி ஆணையிட்டார். நீதிமன்றம் கலைந்து எல்லாேரும் வெளியே வந்தார்கள். காவலாளிகள் அருணை வாகனத்தில் ஏற்றுவதற்காக கூட்டிச் செல்ல எதிரே ஓடி வந்த அனுசா "அருண் அண்ணா எங்க அப்பாவை மன்னிச்சிடுங்க" என்று அழுதாள்.விலங்கிடப்பட்டிருந்த கைகளை குவித்தபடி "என்னை மன்னிச்சிடு அனுசா" என்றான். சுற்றியிருந்தவர்கள் எல்லாேரும் கண் கலங்கினார்கள். மரத்தாேடு சாய்ந்து அழுது காெண்டு நின்ற சித்திராவின் அம்மாவின் கண்களைத் துடைத்தாள் அனுசா. கட்டிப் பிடித்துக் கதறினாள். வாகனத்திலிருந்து பார்த்தபடி கடந்து சென்றான் அருண் கண்ணீராேடு.

எழுதியவர் : அபி றாெஸ்னி (24-Apr-18, 11:43 am)
பார்வை : 361

மேலே