விடுமுறையில் ஒரு வினோதம்

விடுமுறை நாட்கள் வந்தாலே இப்படி தான்.காலையில் எழுந்து அம்மாவுக்கு கூட உதவி பண்ணணும். விடியற்காலை எழுந்து
வீடு வாசல் பெருக்கனும்,எதாவது
அக்கரை இருக்கா? போற
வீட்டிலே எப்படி? வாழ போறியோ?
என அம்மாவின் புலம்பல்கள் கேட்டு கொண்டே அன்றைய பொழுது ஆரம்பிக்கிறது.. நிவேதாவுக்கு...

படிப்பில் சுட்டி பள்ளி கூடத்தில் அவள் பெயர் தெரியாதவர்களே இல்லை.வீட்டில் அதிக செல்லம்
வீட்டிற்கு ஒரே மகள். அம்மா திட்டினாலும் கண்டு கொள்ள மாட்டாள். . அம்மா, அப்பா இருவருமே வேலைக்கு செல்பவர்கள்.நடுதர
குடும்பத்தினர்.. தன் உலகமே தன்
மகள் என நினைப்பவர்கள்.நிவேதாவும் அப்படி தான்.அப்பா அம்மா தன் உலகம் என்பாள்.

விடுமுறை நாட்கள் வந்தாலே அவளுக்கும் அம்மாவுக்கும் போராட்டம் தான்.பெண் குழந்தை ஆயிற்றே..வீட்டு வேலை கற்று கொள் போற வீட்டுல எங்க பெயர்
காப்பாத்து.சொல்லி கொண்டே இருப்பார்.பத்தாம் வகுப்பு படிக்கும்
இன்னும் இரண்டு வருசத்துல கல்யாணம் ஆகிடும்.அம்மா சொல்ல
நிவேதா நான் நல்லா படிக்கனும்.
வேலைக்கு போகனும் எனக்குனு
கனவு இருக்குனு சொன்னாள்.அப்பா அவள் அப்படித்தான் விடுமா நீ போய் குளிச்சிட்டு சாப்பிடு என அப்பா
எப்போதே அவளுக்கு ஊக்கம் கொடுத்துனே இருப்பார்.

அம்மா, அப்பா இருவருமே வேலைக்கு போட்டாங்க..வீட்டிலே நிவேதா மட்டும் தான்.
குளிச்சிட்டு, சாப்பிட்டு டிவி நிகழ்ச்சிகள் பார்த்து கொண்டே இருந்தால், திடீர் என்று ஏன் நாம் இப்படி வீணா நாட்கள் கழிக்கறோம்.
பயனுள்ளதா கழிச்சா நல்லா இருக்குமே..என்ன பண்ணலாம்....
யோசிச்சு யோசிச்சு தூங்கிடாள்.

தூக்கத்துல அவங்க டீச்சர் ஞாபகம் வந்து பாடம் நடத்த ஆரம்பிச்சாங்க..
ஆழ்ந்த தூக்கத்தில் நிவேதா பாடத்தில் கவனிக்க பாடத்துல "சுத்தம் சோறு போடும்".என விளக்கம் தந்து, பின் மரங்கள் சுத்தமான காற்றை தருவதோடு, மழையை தருவது மரங்கள் தான்.என சொல்லி கொண்டே நம் வீட்டில் செடிகள் வைத்து ஆரோக்கியமான காய்கள் விளைய வைத்து நம்ப ரசாயனம் கலக்காத காய்கள் உருவாக்கலாம் என சொல்லி கொண்டே இருக்க தூக்கத்தில் இருந்து நிவேதா எழுந்தாள்.. கனவில் டீச்சர் வந்தாங்க
என் சொன்னாங்க யோசிச்சு செடிகள் பற்றி சொன்னாங்க... என
யுகித்தாள்.

செடி எப்படி வளர்ப்பது? அதை எப்படி பாதுகாப்பது?

பொழுது சாய்ந்து அப்பா, அம்மா இருவரும் வீட்டிற்கு வந்தனர்.அப்பா மகளுக்கு பிடிக்கும் என தேன் மிட்டாய்,கடலை மிட்டாய் வாங்கி வந்து இருந்தார்.பின் நிவி குட்டி இன்னைக்கு எப்படி போச்சு பொழுது?
ஒழுங்காக சாப்பிட்டியா?
ம்ம் சாப்பிட்டேன் அப்பா.. அப்பா
நான் செடிகள் வளர்க்கலாம்னு இருக்கேன்..அது எப்படி வளர்ப்பது?
நடந்ததை சொல்லி கொண்டே
இருக்க அப்பா நல்ல யோசனை மாஆஆ?என் பாராட்ட ஆரம்பித்தான்.
பின் மூன்று தொட்டிகளை வாங்கி
கொடுத்தான்.

நிவி இதுல ஒன்று தக்காளி,மிளக்காய் , கொத்தமல்லி
போட்டுமா?என் சாணம், சாம்பல், செம்மண் கலந்த மணலை நிரப்பி
அதில் போட்டனர். பின் நன்கு வளர
ஆரம்பித்து.

வீட்டிற்கு பயன் படுத்த ஆரம்பித்தனர்.ஆர்வம் அதிகரிக்க அதிகரிக்க அவள் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வீட்டிலேயே விளைவிக்க ஆரம்பித்தாள்...

அவளின் தோழிகளும் அதை அறிந்து அதே போல செடிகளை வளர்க்க ஆரம்பித்தனர்.அக்கம் பக்கம் அனைவரும் அவளை போலவே காய்கள் விளைய வைக்க ஆரம்பிக்க.... பள்ளியில் விழிப்புணர்வு முகாம் ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தனர்.அதில்
நிவேதாவும் கலந்து கொண்டு
தன் செடிகள் பற்றி கூறி பரிசும் பாராட்டும் பெற்றாள்.

நிவேதாவின் அம்மாவும் அப்பாவும்
மகிழ்ந்தனர்...

எழுதியவர் : உமா மணி படைப்பு (24-Apr-18, 9:55 am)
பார்வை : 433

மேலே