கண்டியின் மஹா அதிகாரி பிலிமத்தலாவ

கண்டியின் மஹா அதிகாரி பிலிமத்தலாவ


புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர், இலங்கைத் தீவின் உண்மை வரலாற்றினை மறந்து விடுகிறார்கள் அரசியல் காரணங்களால் வரலாறு மாற்றி அமைக்கப் படுகிறது.

கொழும்பில் இல் இருந்து கண்டிக்குப் போகும் A1 பாதையில் கடுகண்ணாவை வளவைத் தாண்டியவுடன் வரும் ஊரின் பெயர் பிலிமத்தலாவ. இவ்வூர் கண்டியில் இருந்து 10 மைல் தூரத்தில் கடுகண்ணாவை நோக்கி உள்ளது. 1790 யில் இந்த ஊரில் பிறந்த பிலிமத்தலாவ ராஜாதி ராஜசிங்க மன்னனால் மஹா அதிகாரியாக நியமிக்கப்பட்வர் இவரின் தந்தையும் அண்ணனும் மஹா அதிகாரிகளாக இருந்தவர்கள்

"தலவா" என்ற அர்த்தம் சிங்கள மொழியில் தட்டையான பகுதி. என்பதாகும் "பிலீமா" என்பது சிலைகளை குறிக்கும் . அந்த பெயர் உண்மையானது அல்லது உருவாக்கப்பட்டிருக்கலாம் . பழங்கால கிராம பெயர் இது . இந்த கிராமம் பாரம்பரியமாக புகழ்பெற்றது. பித்தளைச் சிலைகளை உருவாக்கும் ஊர் இது.

பிலிமத்தலாவாவின் நீண்ட முழுப் பெயர் பிலிமத்தலாவா விஜேசுந்தர ராஜகருண செனவிரட்ன அபயக்கனுன் பாண்டித முனியன்சே (Pilimatalavuva Vijesundera Rajakaruna Senaviratne Abhayakoon Panditha Mudiyanse) மஹா ஆதிகாரம் III. அவர் ராஜாதி ராஜசிங்கா மன்னரின் மறைவின் பின் உள் நோக்த்தோடு கண்ணசாமி என்ற 18 வயது நாயக்கர் வம்சத்தவனை ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கே என்ற பெயரில் கண்டியின் கடைசி மன்னனாக்கினார். தண்ணீர் குடிக்க வந்த மதுரை நாயக்கர் விம்சத்தைச் சேர்ந்த கண்ணசாமியும் அவனின் அழகிய தாய் சுப்பம்மாளையும் பேராதனையில், விதி சந்திக்க வைத்தது. புத்திசாலியான பிலிமத்தலாவ கண்ணசாமியை இடைக்கால மன்னனாக்கி படிப்படியாக அரச அதிகாரத்தை கைபற்ற திட்டம் போட்டார் 18 வயதில் கண்ணசாமி தன் பெரிய தாயின் ஆதரவோடு ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கா என்ற பெயரில் கண்டி இராச்சியத்தின் மதுரை நாயக்கர் வம்சத்தின் நான்காவது கடைசி மன்னனானான்

ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கா மன்னன் நன்றியுணர்வோடு தனது எல்லா அதிகாரங்களையும் பிலிமத்தலாவ பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார், அனால் மன்னர் அரச அலுவலகத்தின் அதிகாரங்களை மட்டுமே வைத்திருந்தார். கூடுதல் வரிகளை செலுத்துவதில் 1806 ல் கண்டியில் உருவான எழுச்சியை அடக்கியதில் மஹா அதிகாரம் பிலிமத்தலாவ வெற்றிகண்டார் . அதனால் மன்னன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் பிலிமத்தலாவ ஆங்கிலேய ஆளுனருடன் தன் அனுமதி இன்றி , பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது , மன்னனின் காதுகளுக்கு எட்டியது மேலும் பிலிமத்தலாவவின் மேல் பொறாமை கொண்ட சில அதிகாரிகள் அவருக்கு எதிராக மன்னனிடம் புகார் சொன்னார்கள். மஹா அதிகாரி பிரிட்டிஷ்க்காரர்களோடு சேர்ந்து கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற முயற்சி செய்வதாக மன்னனுக்கு முறையிட்டனர் அதனால் மன்னனின் பிலிமத்தலாமேல் உள்ள நம்பிக்கை தளரத் தொடங்கியது . இராஜகாரிய உழைப்பு, மற்றும் ஆளுமை ஆகியவற்றிற்கும் இடையே அவர்கள் இருவருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றின . ஸ்ரீ விக்ரம ராஜசிங்கே கண்டி நகரை அழகு படுத்த விரும்பினார்

கட்டாய உழைப்பு மூலம் ஒரு ஏரியையும் மற்றும் பட்டிராப்பூவ என்ற மன்னர் மக்களுக்கு காட்சி தரும் அமைப்பினையும் உருவாக்கி நகரை அழகுபடுத்துவதற்கு மன்னன் விரும்பினார். அதே சமயத்தில் அதிகாரிகள். மக்களுக்கு அதிக நிலம் விவசாயத்துக்கு தேவைப்பட்டதே தவிர புது ஏரியின் தேவையை அவர்கள் உணரவில்லை என்று மன்னருக்கு எடுத்துச் சொன்னார்கள். . போரா வேவா மற்றும் போகம்பரா வேவா. ஆகிய இரண்டு ஏரிகள் ஏற்கனவே இருக்கிறது அதனால் மூன்றாவது ஏரி கண்டிக்கு அவசிமில்லை என்பதையும் பிலிமத்தலா சுட்டிக் காட்டினார் . மன்னர் அவரின் அலோசனையை ஏற்கவில்லை. நகரத்தின் புறநகர்ப் பகுதியான பேராதனைக்கு அஸ்கிரிய மற்றும் மல்வத்து மடாலயங்களை இடம் மாற்றுவதற்கான தன் சிந்தனையையும் மன்னன் செயலாக்க விரும்பினார் . அந்தத் திட்டத்தை பிலிமத்தலாவும் பிரதம புத்த குருமாரும் ஏற்கவில்லை .

மன்னன் ஒரு முடிவுக்கு வந்தார் இனி பொருத்தது போதுமென்று, அதிகாரிகளின் அதிகாரங்களை திரும்பவும் மன்னன் எடுத்தார் . பிலிமத்தலாவ மஹா அதிகாரியை மன்னர் சப்பரகமுவ மாகாணத்துக்கு இரு வருடங்களுக்கு அதிகாரியாக இடம் மாற்றினார் மன்னருக்கு பெரியம்மை வந்திவிட்டது என்று பிலிமத்தலாவ அறிந்தார். மன்னர் இறந்து விடுவார் என பிலிமத்தலாவ எதிர்பார்த்தார். அனால் அது நடக்கவில்லை . தனக்கு ஏற்றபட்ட அவமரியாதையை மஹா அதிகாரி பொறுத்துக் கொண்டு இருக்கவில்லை . மன்னரை பதவியில் இருந்து நீக்கத் திட்டம் போட்டார் மன்னர் தூங்கும்போது கூலிக்கு அமர்த்திய ஆட்களைக் கொண்டு அவரைக் கொலை செய்த் திட்டம் தீட்டினர் . மன்னர் விழித்ததால் அந்தத் திட்டம் தோழ்வியுற்றது. அதனால் பிலிமத்தலாவ மஹா அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானது

சிங்கள மக்கள் வழிபடும் புத்த தர்மத்தில் இருந்து வேறுபட்டு இந்து சைவ வழிமுறைகளை கண்டியில் அறிமுகப் படுத்த மன்னர் விரும்பினார். இந்தப் போக்கு மன்னருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தியது. அதிகாரிகளின் ஒப்புதல் இன்றி ஒவ்வொரு மாதமும் தென் இந்தியாவில் இருந்து சுமார் 70 மலபாரிகளை கொண்டு வந்து தனக்குப் பாதுகாப்பு வீரர்களாக பயிற்ச்சி அளித்தார் . வந்தவர்களை தலதா மாளிகைக்கு முன்னே உள்ள மலபார் வீதியில் குடி அமர்த்தினார் . இந்த வீதி இப்போது பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது . அதோடு தனது அந்தப்புரத்துக்கு தென் இந்தியாவில் இருந்து இளம் பெண்களையும், கண்டி உயர் சாதி ரதல பெண்களையும் கொண்டு வந்தார். அதிகாரிகளின் அதிகாரங்களை வலு இலக்க செய்தார் . அதிகாரிகளை பிரித்து ஆட்சி செய்யும் சாணக்கியத்தை மன்னர் கடைப்பிடித்தார்

*****

பிலிமத்தலாவ மகா அதிகாரி தனது அவமானத்தை மௌனமாக ஏற்றுக் கொண்டாலும் மன்னரை அகற்றுவதற்கு திட்டமிட்டார். 1803 யில் கண்டியை கைபற்ற பிரிட்டிஷ் முயற்சித்தபோது கண்டி அதிகாரிகலாள் அது தொழ்வியடைந்தது. அப்படி இருந்தும் அவர் பிரிட்டிஷ்காரர்களுக்கு பின்னால் சென்று இரகசிய பேச்சுசவார்த்ததைகளில் ஈடுபட்டார் அவர் மாம்பிட்டிய பண்டார (Mampitiya Bandara) என்ற ஒரு சிங்களம் வம்சத்தினரைய் மன்னராக நியமிக்க பிரிட்டிஷ்காரர்களின் உதவியை நாடினர்

1803 ஆம் ஆண்டு கண்டி பிலிமத்தலாவின் பார்வை இலங்கையில் மேற்கில் ஆட்சி செய்த ஆங்கில அதிகாரிகளின் பக்கம் திரும்பியது. அவர்களின் உதவியைப் பெற்று கண்டி மன்னரை பதவி நீக்கம் செய்வது தான் பிலிமத்தலாவவின் முழு நோக்கம். இந்தப் பிண்ணனியில், ஆங்கில அதிகாரிகளுடன் வழக்கமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். - அவிசாவளையில் உள்ள ஆங்கில ஆளுநரின் செயலர் பியட், கொழும்பில் உள்ள மற்றும் ஆளுநர் ஃப்ரெடெரிக் நோர்த் ( Fredrick North) ஆகியோரோடு மன்னரின் அனுமதி இன்றி தொடர்பு கொண்டு, கண்டியில் கண்டிப்பாக ஒரு பிரிட்டிஷ் தூதரகம் வேண்டும் என்பதை பற்றி பேசினார். பிரிட்டிஷ் ஆளுநர் சாதுர்யமாக அதைப்பற்றி முடிவு சொல்லவில்லை.

இவ்வளவு குற்றங்களை தனக்கு எதிராக மஹா அதிகாரி செய்தும் ஸ்ரீ விக்ரம ராஜசிங்கா தன்னை மன்னனாக்கிய மஹா அதிகாரியை மன்னிக்கத் தயாராக இருந்தார். அவர் தனது அரசாங்கத்திற்கு எதிராக ஒருபோதும் செயல்பட மாட்டேன் என்று ஒரு உறுதிமொழி தரவேண்டும் என்று மன்னர் அவருக்கு சொன்னார் . நாட்டுப்பற்று உள்ள பிலிமத்தலாவ உறுதிமொழியை எடுக்க மறுத்தார். அவர் கண்டி இராச்சியத்தை நாயகர்களிடம் இருந்து காப்பாற்றவே இவ்வாறு பதிலளித்தார்.

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கா மன்னர் வஞ்சனையான நோக்கத்தோடு நீதிமன்றத்தின் முன் மஹா அதிகாரி பிளிமத்தலாவ செய்த குற்றங்களை விசாரிக்க அதிகாரிகள் கொண்ட குழுவை ஏற்பாடு செய்தார் . அதற்குத் தானே நீதிபதியாக இருந்தார் குற்றச்சாட்டுக்களை தெளிவானதாக இருந்ததால் அதிகாரிகள் குழுத் தலைவர்கள் மன்னரை அவர் விருப்பதின்படி தீர்ப்பு சொல்லும் படி சொன்னார்கள்

அரசுக்கு எதிராக செயல் பட மாட்டேன் என்று உறுதி மொழி எடுப்பதை விட மரணதண்டனை நிறைவேற்றுபவர் கைகளில் மரணத்தைத் தழுவுவது மேலானது என்று அவரது தீர்மானத்தை வெளிப்படையாக மன்னருக்கு பிலிமத்தலாவ உறுதியோடு சொன்னார்.

கோபமடைந்த மன்னர் பிலிமத்தலாவாவுக்கு உடனடியாக மரண தண்டனை விதித்தார் . கத்தியால் கழுத்தைவெட்டி மரண தண்டனை நிறைவேற்றும , பகிரவாகந்த (Bahiravakanda) என்ற மலை அடிவாரத்துக்கு பிலிமத்தலாவை வீரர்கள் புடைசூழ கூட்டிச் செல்லப்பட்டார்.
.
தலையை வெட்டுபவரின் கையில் இருந்த வாளின் கூர்மையை தானே சோதனை செய்த பின்னர், பிலிமத்தலாவை மரணதண்டனை நிறைவேற்றிபவரிடம் சொன்னார் "எனது உயிர் ஒரு சில நிமிடங்களில் மன்னரினதும் அதிகாரிகளினதும் தீர்ப்பின்படி இந்த உலகை விட்டுப் போகப் போகிறது . அவர்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன் இந்தக் கத்தியால் என் தலையை ஒரு தடவையில் வெட்டி விடு” : என்று வேண்டினார். அனால் மஹா அதிகாரி பிலிமத்தலாவாவின் தலை இரண்டு வெட்டில் நிலத்தில் விழுந்தது

1811 ஆம் ஆண்டில் மரண தண்டனை நிறை வேற்றப் பட்டது

அவரது உடல், அவரின் குடும்பக் கல்லறைகள் உள்ள மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது. 1948 ஆண்டின் பின் சுதந்திரம் பெற்ற இலங்கை அரசின் மதிப்பீட்டின்படி மஹா அதிகாரி பிலிமத்தலாவை சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு தேசபக்தர் என்று பிரகடனப் படுத்தப்பட்டார்


*****

எழுதியவர் : பொன் குலேந்திரன் (கனடா) (24-Apr-18, 7:29 am)
பார்வை : 128

மேலே