பயணம் தந்த காதல்
நெடுந்தூர பேரூந்து பயணத்தின்பொது
என் பக்கத்தில் வந்தமர்ந்த மாது அவள்
நான் அவளோடு பேச அவள் என்னோடு
பயணம் தொடர எங்கள் பேச்சு எங்கள்
மனப்பக்குவத்தை வெளிப்படுத்தியதோ
அப்படித்தான் என்று நினைக்கின்றேன்
பயணம் முடியும் முன்னே இருவரும்
பயணிகளிலிருந்து நண்பர்களானோம்
விடிய விடிய தொடர்ந்தது எங்கள் பேச்சு
இப்போது ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டோம்
எங்கள் நட்பு காதலாய் மாறியது
பேசிய களைப்பில் சிறிது தூங்கிவிட்டோம்
விழித்துக்கொண்டபோது போகுமிடமும் வந்தது
இருவர் இறங்கிவிட்டோம் -இப்போது நான்
அவளுக்கு துணையாய் அவள் இல்லம் வரை
விட்டுவிட்டுவந்தேன் .................................
இப்போது எங்கள் பயணம் துடங்கியது
நான் காதலன், அவள் என்னவள் என்காதலி
வாழ்க்கைப்பயணம் நோக்கி...............