கற்றல்

கள்ளம் கற்றது
ஓர் இரவு,
காவல் கற்றது
ஓர் இரவு,
ஜனனம் கற்றது
ஓர் இரவு,
மரணம் கற்றதும்
ஓர் இரவு தான்,
கோடி இரவுகள் கற்றபோதும்,
இந்த இரவு கேட்க
போகும் கேள்விக்கு
விடை தெரியாது எனக்கு ?

டேஷமூர்- ஆப்பிரிக்க கவிகன்

எழுதியவர் : குணா (30-Apr-18, 11:19 am)
சேர்த்தது : குணா
Tanglish : katral
பார்வை : 515

மேலே