சிறகில் சுமை தாங்கிய கனவுகள்!
கண்ணீர் சிற்பங்கள்
தலையணைகளில் புதைய
ஈரமாகும்
இரவுப் பொழுதுகள் ...
தவழ்ந்து வந்த காற்றின்
இளஞ்சூட்டில் காயும்...
நட்சத்திரங்களும் நல் நிலவும்
மூடப்பட்ட சாளரம் வழியே
அடைபட்டு கிடக்கும்...
இவள் மனமோ பனியில்
உறைந்த பிணமாய் கண்விழித்தே உறங்கும்...
கண்களின்
சிறகில் சுமை தாங்கிய கனவுகள்
பயணிக்கும்
வானவெளியில் கண்ணுக்குத் தெரியாத பிளவில்
விழுந்து உறங்கும்
கதிரவனிடம் ...
காலை கிழக்கில் உதிக்கும்
சூரியனோடு அந்தக் கனவுகளும் உதிக்கின்றன...
இவள் கண்ணில் கண்ணீரோடு கனவுகள் கலைகின்றன....
சிறகில் சுமை தாங்கி பறக்கும் இவள் கனவுகள்..
..பெண்ணினத்தின் புதைந்து போன பெருங்கனவுகளுள் ஒன்று
.......