உழைப்பவன் ஏமாளியாகிறான்

அழகாய் மண்ணில் பிறந்து
ஆண்டவன் விதிப்படி நகர்ந்து ...
இல்லம் விட்டு,
ஈன்றோருக்கு
உறுதுணையாய் இருக்கும் வயதில்,
ஊரார் விட்டு, வாங்கிய கடனின் வட்டி
எல்லைமீறி போனதாலே,
ஏளனம்தாண்டி எதிர்கால
ஐயம்கொண்டு உழைக்கின்றோம்..
ஒய்யாரமாய் ஆளும் கல்லுளிமங்கன் நசுக்கிக்கொண்டே இருந்தாலும்,
உழைக்கும் வர்க்கம் உழைத்து கொட்ட,
ஒருமணிநேரம் ஒரு ரூபாய்
கணக்கில் முதலாளியாகிறான்,
உழைப்பவன் ஊமையாகிப்போவதனாலே ஏமாளியாகிறான்..