வெட்கத்தில் தலை குணிந்தேன்
நெடுநேரம் உன் கைபிடித்து
தொலைதூரம் நான் நடந்தேன்
சாலையோர பூக்கள் எல்லாம்
நம்மேல் பன்னீரை தெளித்தன
சில நேரம் மாத்திரம் நான் உன் கையை இறுக்கமாக பிடித்தேன்
இந்த நொடிகள் நீள வேண்டும் என அழுத்தமாக சொன்னேன்
உன் கையை அழுத்தி
மௌனமாக சொன்னேன்
என் அழுத்தத்தின் அர்த்தத்தை நீயும் புரிந்து கொண்டாய் என
நினைக்கிறேன்,இப்போது நீயும் இறுக்கமா பிடித்துக் கொண்டாய்
எனது கையை
இதயம் நிறம்பி காதல் ஒழுகுதே
வானில் ஒளியும் இல்லை
இருளும் இல்லை
காதல் நேரம் இது தானோ
உன் ஊமை விழிப் பார்வை
என்மேல் மோதினால் போதும்
நானும் ஏனோ உமிழ் போலப் பறக்கிறேன் ஆழ்கடலில் குதித்து
முத்தெடுக்க முயல்கிறேன்
சுற்றியெங்கும் சப்தம் மொத்தம்
அடங்குதே இந்த பிரபஞ்சமே
ஒருவித மௌன மொழி பேசுதே
என் அருகில் உன் மூச்சிக்காற்று உணர்கிறேன்,நம்மில் இடைவெளி
வேண்டாம் நெருக்கம் கொஞ்சம்
கேட்கிறேன்,நீயும் என் பக்கம் வந்தாய்,உன் கைகள் என் கண்ணம் பூட்டிக் கொள்ள
நம் இதழ்கள் நான்கும்
முட்டிக் கொள்ள ....ஐயோ!
உறக்கத்தில் இருந்து விழித்தேன்
இவை அனைத்தும் கனவா என சிரித்தேன்,வெட்கத்தில் தலை குணிந்தேன்........!