மனத்திரை முழுக்க
ஒரு நாள் வானம்
பூமிக்கு வருகை தந்தது
மழை துளி என உருமாறி,
நானும் மழையோடு
இழைந்து போனேன்
உச்சி முதல் பாதம் வரை
குளிர்ந்து போனேன்,
ஏனோ தெரியவில்லை
என் நெஞ்சில் மட்டும்
தீக்குச்சி ஒன்று அணையாமல்
தீ மூட்டிக் கொண்டிருந்தது
கன நேரத்தில் மழை
மொத்தம் நின்றது
மர இலைகள் மட்டும்
சாரல் சுமந்தது
அதுவும் சில்லென்று
காற்று பட்டு கீழே
விழுந்து சிதறல் கண்டது
சில நாழிகை நான் அமைதி காத்து நின்றேன் என்னை
பூங்காத்து மோதிச் சென்றது
ஆவளுடன் எதிர்ப்பார்த்தேன்
அதோ தூரமாக என்னை எதிர்
நோக்கி வருவது அவளாக
இருக்குமோ என்று
என் எண்ணம் சற்றும்
பொய்க்கவில்லை
என் எதிரே வருவது அவள் தான்
என என் விழிகள் இரண்டும் அவளை அடையாளம் கண்டது
நெஞ்சு கனல் குளிர்ந்தது
இவ்வளவு நேரம் வானம்
பொழிந்த மழையை அவளின் இரு விழி பார்வைகளும்
ஒரே நொடியில் என்மேல்
பொழிந்து விட்டு சென்றது
இதுவரை காய்ச்சல் இல்லை அவளை கண்டதால் வந்த காய்ச்சலோ
இன்னும் தீரவில்லை
இது காதலாக இருக்குமோ
ஒன்றும் புரியவில்லை
அவளும் என்னை
காதலா! என்று அழைப்பாளோ
அதுவும் தெரியவில்லை
இருப்பினும் என் மனத்திரை
முழுக்க அவள் முகம் தான்
அவளோடு வாழ வேண்டும்
பல யுகம் நான்..............!