“பெருகியது உற்சாகம் தெளிந்த நீரோடை போல்”

தமிழ் கவிகள் ஒவ்வொருவரும்
தெரிவிக்கும் கருத்துக்கள்
ஆயிரம்..! ஆயிரம்....!!

எரியும் விளக்கின்
எண்ணையை போலத்தான் அவைகள்!
இருள் சூழ்ந்த நம் வாழ்வில்
சுடர்ஒளி பரவிட துணை நிற்பவை!!

தமிழ் மொழியும்,
தமிழர்தம் மரபும் அறிந்திடல் அவசியமே!

பல கோடி மக்களின் தாய்மொழித்தமிழ்!
அறு சுவையை மிஞ்சுகின்ற வாய்மொழித்தமிழ்!
அகரத்தில் தொடங்கும் சிகரமொழித்தமிழ்!
அகத்தியர் கண்ட அமுதமொழித்தமிழ்!
கல்தோன்றும் முன்தோன்றிய முதுமொழித்தமிழ்!

வள்ளுவர் வார்த்தெடுத்த குரள்மொழித்தமிழ்!
உலகத்து மொழிகளில் செம்மொழித்தமிழ்!
இம்மொழிக்கு ஈடு இணை எம்மொழி ?
தமிழுக்காக தலைவணங்கும் - என்னுள்!
"பெருகியது உற்சாகம் தெளிந்த நீரோடை போல்"!!

செம்மொழியான தமிழ்மொழி!
உலகமெல்லாம் பரவும் வகையில்....
உரத்த குரலில், தெரிக்க.. தெரிக்க....
தமிழ்மொழியில் உரக்க பேசுவோம்!!
வாழ்க! தமிழ்மொழி!! வளர்க! தமிழ்மொழி!!


பொறிஞர்.பிரியதர்சினி மாரிமுத்து
சீர்காழி.

எழுதியவர் : பொறிஞர்.பிரியதர்சினி (1-May-18, 10:47 pm)
பார்வை : 140

மேலே